(க.கமலநாதன்)

மாலபே தனியார் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் அரச  மருத்துவ அதிகாரிகள் சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சைட்டம் நெருக்கடியைத் தீர்ப்போம் என்ற தொனிப்பொருளில் நேற்று வியாழக்கிழமை மாலை இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் தொழில்சார் நிபுணர்கள் கருத்தரங்கொன்று நடைபெற்றுள்ளது.

இதன் போது மருத்துவர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாறியதில் அரசாங்க மருத்துவ சங்கத்தின் முக்கியஸ்தர்கள் இரண்டு பேர் மற்றும் ஏனைய சில நபர்களும் இணைந்து இன்னொரு மருத்துவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

குறித்த தாக்குதலில் காயமடைந்த மருத்துவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான வைத்தியர் மருதானை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாடுக்கு அமைவான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.