அன்னாசிப் பழத்தில் இவ்வளவு சத்துக்கள் இருக்கிறதா?

11 Apr, 2025 | 02:48 PM
image

பொதுவாக பழங்கள் இனிப்பு சுவை கொண்டதாக இருக்கும். அல்லது ஒரு வகையான புளிப்பு சுவை கொண்டதாக இருக்கும். ஆனால், அன்னாசிப் பழம் மட்டும் தான் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை இரண்டும் கலந்ததாக காணப்படுகிறது. 

அன்னாசியில் இருக்கும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் கே, கல்சியம், பொஸ்பரஸ், துத்தநாகம் போன்றன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 

எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க அன்னாசிப்பழம் இன்றியமையாத ஒன்று. அன்னாசிப் பழத்தை உட்கொள்வதன் மூலம் மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கற்கள், உடல் வலி, இடுப்பு வலி, பித்தம் போன்றவை குணமாகும். 

அன்னாசிப் பழத்தில் காணப்படும் ஒட்சிசனேற்றிகள் இதய நோய் பாதிப்புகளை குறைக்கிறது. மேலும் இதில் அடங்கியுள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வைத் திறனை அதிகப்படுத்துகிறது. 

அன்னாசியிலுள்ள கல்சியம், மங்கனீஸ் ஆகியன எலும்புகளை வலிமையடையச் செய்கின்றன. 

பினோலிக்ஸ், ஃபினாவனாய்டு, விட்டமின் சி சத்துக்கள் இதில் நிறைந்து காணப்படுவதால் புற்றுநோய் அபாயம் குறைவடையும். 

அன்னாசிப் பழத்தை சிறிய துண்டுகளாக்கி அதில் ஒரு துண்டு இஞ்சியை சீவிப் போட்டு கலந்து சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் வலி குறைவடையும். 

அன்னாசிப் பழத்தை சிறிதாக வெட்டி அதில் சிறிதளவு ஓமத்தைத் தூளாக்கி அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு க்ளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, அன்றிரவு அப்படியே விட்டு மறு நாள் காலையில் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்று தொப்பை குறையும். 

ஆனால், அன்னாசிப் பழத்தை கர்ப்பிணிப் பெண்களும் மூல நோய் உள்ளவர்களும் தவிர்ப்பது நல்லது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right