இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் குழுமமான Prime Group, முன்னணி வியாபாரம் - அரசாங்கம் சமூகப் பொறுப்புணர்வு திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. தனியார் துறை மற்றும் உள்ளூராட்சி அதிகார அமைப்புகளிடையே இணைந்த செயற்பாட்டை கட்டியெழுப்புவதை இந்தத் திட்டம் நோக்காகக் கொண்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பயிற்சிப்பட்டறைத் தொடர் இந்த புத்தாக்கமான நிகழ்ச்சித் திட்டத்தினூடாக முன்னெடுப்படவுள்ளதுடன், இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்துடன் (FSLGA) இணைந்து வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்தத் திட்டத்தின் அறிமுக அமர்வு பெப்ரவரி 19ஆம் திகதி கம்பஹா மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதில் கம்பஹா மாநகர சபையின் ஆளுனர் லோச்சனா பாலசூரிய அடங்கலாக அதிகாரிகளும், Prime Group இன் சார்பாக அதன் ஊழியர்கள் குழுவினரும் பங்கேற்றிருந்ததுடன், மத்திய மாகாணவிசாரணை அதிகாரி, உதான வீரசிங்க இந்த நிகழ்வை வழிநடத்தியிருந்தார்.
லோச்சன பாலசூரிய குறிப்பிடுகையில், இந்த புத்தாக்கமான தொடரினூடாக, பொது சேவை விநியோகம் மேம்படுத்தப்படும். எமது அதிகாரிகள் பெற்றுக் கொண்ட திறன் கட்டியெழுப்பல், விசேடத்துவ பயிற்சி மற்றும் அறிவு பகிர்வு போன்றவற்றினூடாக, தொழிற்துறைகள் மற்றும் சகல துறைகளிலும் வினைத்திறனான மற்றும் உற்பத்தித்திறன் வாய்ந்த வேலைப்பாய்ச்சலை மேற்கொள்ள பங்களிப்புச் செலுத்தும்.” என்றார்.
ரியல் எஸ்டேட் துறையில் சேவைச் சிறப்பை மேம்படுத்துவதற்கும் உறுதியான பொது-தனியார் பங்காண்மையை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பையும் Prime Group இன் நடவடிக்கை வழிகோலுவதாக அமைந்துள்ளது.
Prime Group தவிசாளர் பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “தொழிற்துறைகளை நிர்வகிப்பதில் முக்கிய பங்காற்றும் பொது அதிகாரிகளின் ஆற்றல்களில் முதலீடு செய்வதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. அதிகளவு வெளிப்படையான, வினைத்திறனான மற்றும் முன்னேற்றகரமான உள்ளூராட்சி ஆளுகை கட்டமைப்புக்கு பங்களிப்பு செய்து, அதனூடாக குறிப்பாக இலங்கை குடிமக்கள் அடங்கலாக சகல பங்காளர்களுக்கும் அனுகூலமளிக்க PrimeGroupஎதிர்பார்க்கிறது.” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM