SLT-MOBITEL புத்தாக்கதினம் 2024 அண்மையில், மருதானை, ட்ரேஸ்சிட்டி, Embryo Innovation Centerஇல் நடைபெற்றது. இதில், நிறுவனத்தின் ஊழியர்களினால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு தீர்வுகள் மற்றும் புத்தாக்கமான சிந்தனைகள் போன்றன வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் SLT-MOBITEL சிரேஷ்ட முகாமைத்துவ குழுவினர், நிறுவனத்தின் இதர பிரதிநிதிகள் மற்றும் மதிப்பாய்வு குழு அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வு எட்டுமாதகால Intrapreneurship Studio நிகழ்ச்சியின் வெளிப்பாடாக அமைந்திருந்ததுடன், SLT R&D இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூன்று பிரிவுகளில் சிறந்த புத்தாக்கங்களை கௌரவிப்பதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
அவற்றில் சிந்தனை புத்தாக்கம், புதிய தயாரிப்பு மற்றும் தீர்வுகள் புத்தாக்கம் மற்றும் செயன்முறை மற்றும் செயற்பாடுகள் மற்றும் பராமரிப்பு (O&M) புத்தாக்கம் போன்றன அடங்கியிருந்தன.
சிறந்த intrapreneursகளுக்கு நிறுவனசார் வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத்தர மேம்பாடு மற்றும் நலனை முன்னெடுத்திருந்த அவர்களின் பங்களிப்புகளுக்காக விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.
MAS Innovation இன்Futureworks பணிப்பாளரும், IQ Global இன் ஸ்தாகபருமான அஹமட் இர்பான் இந் நிகழ்வில் விசேட பேச்சாளராக கலந்து கொண்டார்.
‘Trends in Innovation in the Service Industry,’ எனும் தலைப்பில் இவர் விசேட உரையை ஆற்றியிருந்தார். நிகழ்வில் வெளிப்படுத்தப்பட்ட சிறந்த தீர்வுகளினூடாக, இலங்கையின் தொழினுட்ப கட்டமைப்பில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஊழியர்களின் ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM