குடல் புற்றுநோயிற்கு காரணமாகும் கொழுப்பு

Published By: Robert

23 Jun, 2017 | 03:34 PM
image

நாற்பதைக் கடக்கும் ஆண்களும், திருமணமாகி, குழந்தைப் பெற்ற பெண்களும் தங்களின் உடல் எடையால் பெரும்பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அதிலும் வயிற்றுப் பகுதியில் சேர்ந்துவிடும் அல்லது முறையற்ற உணவு பழக்கத்தால் சேகரிக்கப்படும் கொழுப்பால் தான் இவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

அதிக உடல் எடையுடன் கூடிய தொப்பை இருந்தால் இனிஅதனை குறைப்பதில் தீவிர கவனம் செலுத்துங்கள். ஏனெனில் இத்தகைய தொப்பைகள் தான் மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பித்தப்பை மற்றும் கர்ப்பப் பை வாய் புற்றுநோயையும் உருவாக்குவதில் அதிக பங்களிப்பு செய்கிறது.

இடுப்புபகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பானது குடல் புற்றுநோயை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பதாக ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

உங்களின் உணவு பழக்கத்தால் உடலில் சேரும் கொழுப்பு, ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோனின் உற்பத்தியையும் அளவையும் சமச்சீரற்றதாக்குகிறது. இதனால் உடலில் இயல்பாக சுரக்கவேண்டிய இன்சுலீனின் அளவில் சமச்சீரின்மை உண்டாகி வயிற்றின் கொள்ளளவை அதிகரிக்கிறது. இவையனைத்தும் புற்றுநோய் ஏற்படுவதை ஊக்குவிக்கும் காரணிகளாகவும் செயல்படுகின்றன.

அதே சமயத்தில் உடலில் இருக்கும் கொழுப்பு, திசுக்களில் உள்ள நோய் எதிர்ப்பு உயிரணுக்களை ஈர்த்துவிடுகிறது. இதன் காரணமாக இத்தகைய உயிரணுக்கள் வெளியிடும் வேதிப் பொருள்கள் உடலில் வீக்கத்தை அதிகரித்து புற்றுநோயை உண்டாக்கக்கூடிய செல்களின் செயல்பாட்டை தூண்டிவிடுகின்றன.

அதனால் தொப்பைகளை குறைப்பதில் உடனடியாக கவனம் செலுத்துங்கள். அப்பிள், வெள்ளரிக்காய், தர்பூசணி, பாதாம் பருப்பு, கீரை வகைகள், பீன்ஸ் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் நடைபயிற்சியும்,உடற்பயிற்சியும் செய்வதை தவிர்க்காதீர்கள்.

Dr. அஜித் ஷிண்டோ

தொகுப்பு அனுஷா. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04