மகாவலி ஆற்றுக்குள் தவறி விழுந்த யுவதியொருவர் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவரால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் வியாழக்கிழமை (10) பகல் இடம்பெற்றுள்ளது.
கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.
யுவதி ஒருவர் கட்டுகஸ்தோட்டை பாலத்திலிருந்து மகாவலி ஆற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாக அப்பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு பிரதேசவாசிகள் சிலர் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி மகாவலி ஆற்றுக்குள் குதித்து யுவதியை காப்பாற்றியுள்ளார்.
இதனையடுத்து இந்த யுவதி சிகிச்சைக்காக கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யுவதியை காப்பாற்றிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரியை பிரதேசவாசிகள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM