அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அத்துமீறிய செயற்பாடு தொடர்பிலேயே அவர் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.

மாளிகாகந்த நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.