தமிழ் மாதத்தின் இறுதி மாதமான பங்குனி மாதத்தில் உத்திரம் நட்சத்திரம் வரும் நாளில் பௌர்ணமி திதியும் இடம்பெறும். இந்த புனிதமான நன்னாள் இறைவன் - இறைவியின் திருமண நாளாக இந்து சமயத்தில் கொண்டாடப்படுகிறது. சிவன்- பார்வதிதேவியின் திருமணம், ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம், ராமர் - சீதை திருமணம், முருகன் - தெய்வானை திருமணம், சந்திரன்- 27 கன்னியர் திருமணம் என இறைவனின் திருமணம் நடைபெற்றது.
இதனால் சிவாலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும் , பெருமாள் ஆலயங்களிலும் இறைவனுக்கும் இறைவிக்கும் திருமண வைபவம் நடந்தேறும். இந்த நாளில் இறைவனின் திருமண வைபவத்தை.... திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும், ஆண்களும் தரிசித்தால்.. அவர்களுடைய திருமணத்தடை அகலும் என்பது நம்பிக்கை. மேலும் இந்த நாளன்று முன்னோர்கள் பரிந்துரைத்த படி விரதம் இருந்து, மாலையில் ( அபிஜித் முகூர்த்த வேளையில்) ஆலயத்திற்குச் சென்று மணக் கோலத்தில் தெய்வங்களை தரிசித்தால் திருமண பாக்கியம் விரைவில் கிட்டும்.
மகாலட்சுமி தாயார் அவதரித்ததும் இந்த நன்னாளில்தான். அத்துடன் தாயார் பங்குனி உத்திர விரதத்தை கடைப்பிடித்ததன் காரணமாக இந்த நன்னாளில் தான் ஸ்ரீ மகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியத்தையும் பெற்றார்.
மேலும் பங்குனி உத்திரத் தினத்தன்று ஒவ்வொரு திரு கோயில்களுக்கு அருகே இருக்கும் நீர் நிலைகளில் தீர்த்தவாரி என வைபவம் நடைபெறும். அந்தத் தருணத்தில் உங்களது வீட்டிற்கு அருகிலோ அல்லது ஊரிலோ நீர் நிலைகள் இருந்தால்.. அவற்றில் புனித நீராடினால் பங்குனி உத்திர தினத்தன்று நீராடியதற்கான பிரத்யேக புண்ணியம் கிடைக்கும்.
சிவனடியார்களில் ஒருவராக போற்றப்படும் காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்த நாளும் இந்த பங்குனி உத்திர நாளன்றுதான். இன்றைய திகதியில் அந்த சிவனடியாரை மனதில் தியானித்து உங்களால் இயன்ற அளவிற்கு அன்னதானத்தை குடிநீருடன் சேர்ந்து வழங்குவதால் சிவனின் அருளை பரிபூரணமாக பெறலாம்.
பொதுவாக இந்த நன்னாளில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து காவடி- பால்குடம் எடுப்பவர்கள் முருகப் பெருமானின் அருளை பெறுவார்கள் என்பது திண்ணம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM