நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியோரத்தில் வீற்றிருக்கும் கெலேகால அருள்மிகு ஸ்ரீ கதிரேஷன் சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்தர இரதோற்சவ பெருவிழா ஏராளமான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் பக்திபூர்வமாக வியாழக்கிழமை (10) நடைபெற்றது.
2025ஆம் ஆண்டுக்காக வருடாந்த பங்குனி உத்தர முத்தேர் திருவிழா கடந்த 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து, நேற்று 9ஆம் திகதி புதன்கிழமை பால்குட பவனி நடைபெற்றதையடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, இன்றைய தினம் (10) ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று, வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான், முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மேள தாள வாத்தியங்கள் முழங்க, மும்மூர்த்திகளும் உள்வீதி வலம் வந்து பிரதான வீதியினூடாக, நுவரெலியா நகரில் வெளி வீதியில் எழுந்தருளிய நிலையில் தனித்தனியே முத்தேர் பவனியாக சென்றது.
இந்த பூஜைகள் குருசுவாமி பிரம்மஸ்ரீ தயாளன் குருக்களின் புதல்வன் இளம்சுடர் நித்தியலங்கார பூசனம் பிரம்மஸ்ரீ த. சுதன்சர்மா ஆலய பிரதம குரு தலைமையில் ஆகம சாஸ்திர முறைப்படி நடைபெற்றது.
பக்தர்கள், ஆலய நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இரத பவனியில் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM