சித்திரை புத்தாண்டு ஸ்பெஷல் ; பூந்தி லட்டு

10 Apr, 2025 | 06:00 PM
image

சித்திரை புத்தாண்டில் தித்திப்பான பூந்தி லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்........ 

தேவையான பொருட்கள் ; 

  • 2கப் கடலை மாவு
  • 2கப் சர்க்கரை
  • 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
  • 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  • சிறிதளவு புட் கலர்
  • 2 மேசை கரண்டி முந்திரி
  • சிறிதளவுபிஸ்தா பருப்பு
  • 1 தேக்கரண்டி நெய்

செய்முறை ; 

1. முதலில் கடலை மாவை எடுத்து அதனுடன் பேக்கிங் சோடா சேர்க்கவும்.

2. சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கடலைமாவை கரைக்கவும். ஜவ்வு மாதிரி ஒழுகும் பதத்திற்கு மாவை கலக்கவும். அதிக தண்ணீரும் இருக்கக் கூடாது கெட்டியாகவும் இருக்கக் கூடாது.

3. கரைத்த மாவில் சூடான எண்ணெய் ஒரு தேக்கரண்டி சேர்க்கவும்.

4. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி பூந்தி கரண்டி எடுத்து அதில் மாவை ஊற்றி முத்து முத்தாக பூந்தியை பொரித்து எடுக்கவும். 

5. பின்னர் மற்றுமொரு கடாயில் சர்க்கரையை சேர்த்து தண்ணீர் விட்டு பிசுக்கு பதத்திற்கு கொண்டு வரவும்.

6. பிசுக்கு பதம் வந்ததும் அதில் கலரை சேர்க்கவும். அதில் பொரித்து வைத்த பூந்திகளை இட்டு கடாயை மூடி 3 நிமிடம் வேக விடவும்.

7. மூன்று நிமிடம் கழித்து கடாயை திறந்து பார்த்தால் சர்க்கரை பாகை பூந்தி உறிஞ்சி இருக்கும்.

8. பின்னர் அடுப்பை அணைத்து விட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.

9. முந்திரிகளை இலேசாக வறுத்து எடுத்து பூந்தியுடன் சேர்க்கவும்.அதனுடன் நெய் மற்றும் ஏலக்காய் தூளையும் சேர்க்கவும்.

10. எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பின்னர் கையில் எடுத்து நன்றாக அழுத்தி லட்டை உருண்டைகளாக பிடிக்கவும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right