இனி வீட்டிலேயே சாக்லேட் செய்யலாம்

10 Apr, 2025 | 05:22 PM
image

வீட்டிலேயே சுலபமாக சாக்லேட் செய்வது எப்படி என்று பார்ப்போம்........ 

தேவையான பொருட்கள்:

  • மில்க்மேட்
  • கொக்கோ பவுடர் – 50 கிராம்
  • வெண்ணை – 2 தேக்கரண்டி 

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தை நன்கு சூடுப்படுத்திக்கொள்ளவும். பின்னர் அதில் மில்க்மேட்டை ஊற்றவும்.

2. மில்க் மேட் நன்கு உருகி வரும் போது அதில் கொக்கோ பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக  கலந்து விடவும்.

3. கொக்கோ பவுடர் மில்க் மேட்டுடன் நன்றாக கலந்து கெட்டியான பதத்திற்கு வந்துவிடும். 

4. இறுதியாக அதில் வெண்ணெய்யை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கலந்துவிட்டு பின்னர் அடுப்பிலிருந்து இறக்கவும்.

5. அடுப்பிலிருந்து இறக்கிய சாக்லேட்டை ஒரு கிண்ணத்தில் ஊற்றி குளிரூட்டியில் வைக்கவும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right