பன்னீர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்ப்போம்.......
தேவையான பொருட்கள் :
- பாசுமதி அரிசி - 250 கிராம்
- பன்னீர் - 150 கிராம் (துண்டுகளாக வெட்டவும் )
- வெங்காயம் - 1
- தக்காளி - 2
- இஞ்சி , பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் விழுது - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் 3/4 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
- பச்சை பட்டாணி - 1/2 கப்
- தயிர் 2 தேக்கரண்டி
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- நெய் - 2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை ;
1. வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
2. பாசுமதி அரிசியை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
3. அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும்.
4. அத்துடன் இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் விழுது சேர்த்து மேலும் வதக்கவும்.
5. மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும்.
6. பின்னர் அதில் தயிர் , உப்பு மற்றும் பன்னீர் சேர்ந்த்து கிளறவும்.
7. இறுதியாக 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து கிளறி, வெந்தவுடன் பிரியாணியை அடுப்பிலிருந்து இறக்கவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM