ஹோட்டல் உரிமையாளரை கடத்திச் சென்று கப்பம் பெற்ற இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் கைது

10 Apr, 2025 | 03:20 PM
image

கடந்த 06 ஆம் திகதி அநுராதபுரம் மிஹிந்தலை பகுதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை கடத்திச் சென்று 45 இலட்சம் ரூபா பணத்தினை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் இருவர் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய் உட்பட 5 சந்தேக நபர்கள் மிஹிந்தலை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிஹிந்தலை நகரிலுள்ள ஹோட்டல் உரிமையாளரான ஓய்வு பெற்ற கடற்படை உத்தியோகத்தரினால்  07 ஆம் திகதி மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் அதிகாரிகள் மற்றும்  சிவில் பாதுகாப்பு சிப்பாய் உட்பட ஐந்து பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலன்னறுவை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 30 வயதிற்கும் 48 வயதிற்கும் இடைப்பட்ட வர்கள்  ஆவார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று  தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மிஹிந்தலை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர்,  சந்தேக நபர்களை  தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் சுமார் 15,000 மண்சரிவு...

2025-12-09 16:59:03
news-image

அவசரகாலநிலைப் பிரகடனத்தின்கீழ் பரந்துபட்ட அவசரகால விதிகள்...

2025-12-09 20:25:08
news-image

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுசீரமையுங்கள்...

2025-12-09 20:23:52
news-image

நிவாரணம் வழங்குவதில் அரசியல் அழுத்தம் -...

2025-12-09 17:07:45
news-image

பண்டத்தரிப்பில் தூண்டிலில் மீன் பிடித்த இளைஞர்...

2025-12-09 23:04:12
news-image

பண்டாரவன்னி கிராம மக்களுக்கான அவசர அறிவிப்பு!

2025-12-09 22:54:05
news-image

மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று...

2025-12-09 20:24:19
news-image

அழிவினால் ஏற்பட்ட இழப்புக்களை அரசாங்கம் முறையாக...

2025-12-09 20:25:42
news-image

200 வருடங்களாக மலையக மக்கள் வாழ...

2025-12-09 20:27:39
news-image

தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு...

2025-12-09 22:18:49
news-image

முள்ளியவளை – நெடுங்கேணி வீதியால்  பயணிக்கும்...

2025-12-09 22:17:16
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Anunine...

2025-12-09 22:07:52