கொழும்பு பங்கு பரிவர்த்தனை கல்வியகம் நடாத்திய நிதியியல் சந்தைகளில் சான்றிதழ் கற்கைநெறிக்கான ஆரம்ப விருது வழங்கல்

10 Apr, 2025 | 03:20 PM
image

கொழும்பு பங்கு பரிவர்த்தனை கல்வியகம் அதன் ஆரம்ப CCFM விருது வழங்கல் விழாவில் நிதியியல் சந்தைகளில் சான்றிதழ் கற்கைநெறியினை (CCFM) வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களது சிறந்த சாதனைகளை பெருமையுடன் கொண்டாடியது.

இது நிதியியல் அறிவு மற்றும் மூலதனச்சந்தை கல்வியினை மேம்படுத்துவதற்கான கொ.ப.ப. கல்வியகத்தின் கடப்பாட்டினை வலியுறுத்துகின்றது.

CCFM கற்கைநெறியானது நிதியியல் சந்தைகளில் அடிப்படை அறிவினை வழங்குவதற்காகவும் அறிவுபூர்வமான நிதியியல் தீர்மானம் மேற்கொள்வதில் ஒரு விரிவான புரிந்துணர்வுடன் தனிநபர்களை தயார்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டது.

இப்பாடநெறியானது முதலீட்டு அடிப்படைகள், பங்குத்தெரிவு நுட்பங்கள் மற்றும் நிதிக்கூற்றுக்களின் பகுப்பாய்வு என்பவற்றை உள்ளடக்கிய மூன்று முக்கிய தொகுதிகளைக் கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை உள்ளடக்குகின்றது.

இப்பாடநெறியானது துறைசார் நிபுணர்கள் மற்றும் முன்னணி கல்விமான்கள் உள்ளடங்கலான ஒரு சிறந்த விரிவுரையாளர்கள் குழுவினால் கற்பிக்கப்படுகின்றது.

ஆரம்ப உரையின்போது, கொ.ப.ப. கல்வியகத்தின் முகாமையாளர்தாரக்க அமரசூரிய  பின்வருமாறு கூறினார்,

இந்த பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 104 மாணவர்கள் குறித்து நாம் அளவற்ற பெருமையடைவதுடன் இது இலங்கையின் நிதியியல் சந்தையில் வளர்ச்சியடைகின்ற ஆர்வத்தினை பிரதிபலிக்கின்றது. இந்த மும்மொழி நிகழ்நிலை திட்டமானது நிதியியல் நிலத்தோற்றத்தினை நம்பிக்கையுடன் சமாளிப்பதற்கு அவசியமான அறிவுடன் உங்களை தயார்படுத்தியுள்ளது.

இந்த அடித்தளத்திலிருந்து கட்டியெழுப்ப விரும்புபவர்களுக்கு நிதியியல் சந்தைகளில் உயர்நிலை டிப்ளோமா (ADFM) ஆனது நிபுணத்துவத்தினை மேம்படுத்துவதற்கு வளர்ச்சியினை ஏற்படுத்துவதற்கு மற்றும் தொழில் வாய்ப்புகளை திறப்பதற்கான ஒரு நேரடி பாதையினை வழங்குகின்றது.” என்றார்.

பட்டம் பெற்றவர்களை விளித்துரைக்கும்போது கொ.ப.ப. பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க பின்வருமாறு கூறினார்,

“ஒரு நிதியியல் அறிவாற்றல் மிக்க சமூகத்தினை உருவாக்குவது எமது பணிநோக்காகும் - இங்கு தனிநபர்கள் நம்பிக்கையுடன் முதலீடுகளில் ஈடுபடலாம்,  சந்தைப்போக்குகளை புரிந்துகொள்ளலாம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு சாத்தியமான பங்களிப்பினை மேற்கொள்ளலாம். இச்சான்றிதழ் கற்கைநெறியானது இந்த இலக்கை அடைவது நோக்கிய ஒரு முன்னேற்றம் என்பதுடன் மாணவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகிய இருசாராரும் அவர்களது அறிவினை மேம்படுத்துவதற்கு இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வதனை பார்க்கும்போது ஊக்கமளிக்கின்றது”என்றார்.

விருது வழங்கப்பட்டவர்களது சாதனைகளின் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவிக்கும்போது,  பேச்சாளரான அட்வகேட்டா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனநாத் பர்னாந்து பின்வருமாறு கூறினார்,

“நிதியியல் அறிவானது அறிவுபூர்வமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதற்கும் மற்றும் நிலைபேறுடைய செல்வத்தை கட்டியெழுப்புவதற்கும் தனிநபர்களுக்கு வலுவளிக்கின்றது. கொ.ப.ப. கல்வியகத்தின் சான்றிதழ் வைத்திருப்பவர்களாக உங்களிடம் தற்போது இந்த நிலத்தோற்றத்தினை வினைத்திறனாக சமாளிப்பதற்கான அடிப்படை அறிவு மற்றும் கருவிகள் காணப்படுகின்றன.

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை மற்றும் ஏனைய முதலீட்டு வழிகள் நிதியியல் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. இந்த வாய்புக்கள் புத்திசாலித்தனமாக பயன்படுத்தப்படும்போது நீண்டகால செல்வச்செழிப்பிற்கு இட்டுச்செல்லும்”.

நிதியியல் சந்தைகளில் சான்றிதழ் கற்கைநெறியானது நிதியியல் கல்வியில் காணப்படுகின்ற இடைவெளியினை நிரப்புவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நிதியியல் சந்தைகளின் சிக்கல்களை சமாளிப்பதற்கு அவசியமான அடிப்படை அறிவுடன் தனிநபர்களுக்கு வலுவளிக்கின்றது.

குறிப்பாக சந்தை பற்றி சிறிய அல்லது எவ்விதமான புரிந்துணர்வினையும் கொண்டிராத ஆனால் தங்களது நிதியியல் திறனை விரிவாக்குவதற்கு விரும்பும் மாணவர்கள், முதலீட்டாளர்கள் அல்லது தனிநபர்களுக்கான ஒரு சிறந்த ஆரம்ப புள்ளியாக காணப்படுகின்றது.

CCFM ஒரு முதலீட்டாளராக வருவதற்கு, நிதியியலில் ஒரு தொழிலினை தொடர்வதற்கு திட்டமிடுபவர்களுக்கு அல்லது அவர்களது நிதியியல் எதிர்காலத்தினை பாதுகாப்பதற்கு விரும்புபவர்களுக்கு ஒரு திடமான அடித்தளத்தினை வழங்குகின்றது.

இக்கற்கைநெறியினை வெற்றிகரமாக நிறைவுசெய்கின்றவர்கள் க.பொ.த. உயர்தர (A/L) தகைமையின்றி நிதியியல் சந்தைகளில் உயர்நிலை டிப்ளோமாவான (ADFM) கற்கைநெறியில் நேடியாக நுழைவதற்கான வாய்ப்பினை பெறுவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பொன் விழா...

2025-04-28 19:25:43
news-image

புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் ...

2025-04-28 18:52:21
news-image

பம்பலப்பிட்டி கதிரேசன் கோவில் பூஜையில் இல....

2025-04-28 17:54:13
news-image

கோணைநாதப் பெருமானின் தீர்த்த உற்சவம்..!

2025-04-28 15:44:08
news-image

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’...

2025-04-27 19:43:23
news-image

தமிழரசு கட்சியின் வவுனியா வடக்கு பிரதேச...

2025-04-27 17:05:39
news-image

கோணேஸ்வர பெருமானின் தேர்த்திருவிழா

2025-04-27 14:08:29
news-image

வவுனியாவில் இடம்பெற்ற பரிசுத்த பாப்பரசருக்கான அஞ்சலி...

2025-04-26 22:22:53
news-image

டொரின்டன் விளையாட்டு மைதானத்தில் “வசத் சிரிய...

2025-04-26 15:37:44
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தின் ‘தமிழ் அரங்கியல்’

2025-04-26 22:11:45
news-image

புனித தந்தத்தை தரிசிக்க வந்தோருக்கு கண்டி...

2025-04-26 14:06:04
news-image

அராலி மேற்கு ‘மலரும் மலர்கள்’ சிறுவர்...

2025-04-26 11:23:47