அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் நேற்று நாகர்கோவில் கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

தமிழகத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் நாகர்கோவில் கடற் பகுதியில் 16 கடல்மைல் தொலைவில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடற்படை கூறியுள்ளது.

Image result for இந்திய மீனவர்கள் கைது virakesari

இதன்போது, கடற் பகுதியில் சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த கடலோர காவற்படையினரால் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் என்பன யாழ் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது.