சிந்து சமவெளி நாகரிகம் என்பது, மண்ணில் புதைந்து, அழிந்து போன ஒரு நகர நாகரிகம் ஆகும். ஏறத்தாழ இதேபோன்று மண்ணில் புதைந்து, அழிந்துபோன ஒன்று தான் பொம்பெய் நகரம் ஆகும். இந்நகரம் அழிந்துபோய், 2000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகின்றது.
அப்போதைய ரோம் பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட பொம்பெய் நகரம், தற்போது இத்தாலி நாட்டின் கட்டுப்பாட்டில் காட்சித் தளமாக உள்ளது.
இத்தாலியில் உள்ள நேப்பிள்ஸ் வளைகுடா கடற்கரையின் அருகில் ஒரு மிகப்பெரிய மலை உள்ளது. அது ஒரு சாதாரண மலை அல்ல. பல ஆபத்துக்களை நிகழ்த்திய எரிமலை அது. அந்த எரிமலையின் பெயர் வெசுவியஸ் மலை (Mount Vesuvius)
2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வெசுவியஸ் எரிமலையை ஒட்டி பல நகரங்கள் இருந்துள்ளன. அதில் குறிப்பிடத்தக்க பெருநகரங்களாக பொம்பெய் (Pompeii) நகரமும், ஹெர்குலேனியம் (Herculaneum) நகரமும் ஆகும்.
பொம்பெய் நகரில் மட்டும் ஏறத்தாழ 25,000 பேர் வாழ்ந்திருப்பார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்நிலையில், கி.மு 79ஆம் ஆண்டு ஒரு நாள், காலை 8 மணியளவில், பெரும் சப்தத்துடன் வெசுவியஸ் எரிமலை புகையை கக்கியது. நண்பகல் 1 மணி இருக்கும். கொஞ்சமாக வந்த புகை பெரும் சத்தத்துடன் கரும் புகையாக மாறி அதிக அளவில் வெளியேறுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக புகை ஏரிமலையை ஒட்டியுள்ள பொம்பெய் போன்ற நகரங்களுக்கு பரவவும் செய்தது. சிறிது நேரத்தில் எரிமலை வெடித்து நெருப்பு பிழம்புடன், எரி கற்களையும் மழையாக வாரி இறைக்கின்றது.
தப்பிக்க நினைத்த மக்கள் எரிமலையில் இருந்து வெளியிடப்பட்ட காபனீரொட்சைட் கலந்த புகையால் ஆங்காங்கே முடங்குகின்றனர்.
நண்பகல் 3 மணி இருக்கும். தற்போது அந்த நகரம் முழுவதும், அழுகுரலும், கூச்சலுமாக இருக்கிறது. எல்லா இடமும் எறிகற்கலும், புகையும், சாம்பலுமாய் காட்சி அளிக்கிறது.
மக்கள் சுவாசிக்கவே சிரமப்படுகின்றனர். எரிமலை சீற்றம் அதிகரித்து அங்குள்ள மக்கள் ஒவ்வொருவராக இறக்கவும் செய்கின்றனர். எரிகற்கலால் அங்குள்ள மாடமாளிகைகள் அனைத்தும் தரைமட்டமாகிறது.
பின்னர், ஒட்டு மொத்த பொம்பெய் நகரமும், எரிமலை சீற்றத்தால் நரகமாகக் காட்சியளிக்கிறது. நகரவாசிகள் அனைவரும் இறக்கின்றனர். அந்த இரவு விடிவதற்குள் ஒட்டுமொத்த பொம்பெய் நகரமும் எரிமலை சாம்பலால் மூடப்படுகிறது.
இந்த எரிமலை சீற்றத்தால் பொம்பெய் நகரத்துடன், ஹெர்குலேனியம், ஒப்லொன்டிஸ் போன்ற நகரங்களும் எரிமலை சாம்பலால் மூழ்கடிக்கப்பட்டன.
சில நூறு ஆண்டுகளுக்கு பின்னர், எரிமலை சாம்பலினால் எரிமலையை ஒட்டியுள்ள நிலப்பரப்பு வளமிக்க மண்ணாக மாறி செடி, கொடி, மரங்கள் வளர்ந்து "பச்சைப்பசேல்" என்று காட்சியளித்ததால் வெசுவியஸ் எரிமலை ஏற்படுத்திய அழிவை காலப்போக்கில் மக்களும் மறந்தனர்.
இவ்வாறாக மண்ணுக்குள் உறங்கி கொண்டிருந்த பொம்பெய் நகரமானது, கி.பி 1748இல் புதைப்பொருட்கள் தோண்டும் குழுவால் புதையலுக்காக பொம்பெய் அமைந்த பகுதியில் தோண்டப்படுகின்றது.
ஆனால் புதையலுக்கு பதிலாக சாம்பலால் மூடப்பட்ட எலும்பு கூடுகள்தான் கிடைக்கின்றன. இதனால் அந்நாட்டு அரசானது தொல்லியல் ஆய்வுக்கு அந்த இடத்தை உட்படுத்துகின்றனர்.
பல தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர். முதலில் கட்டடங்களும், பொருட்கள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டன. பல ஆண்டுக்குப் பின்புதான் இந்த மனித எலும்பு கூடுகள் பலவற்றை கண்டுபிடித்தனர்.
இந்த எரிமலை விபத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் 20000த்திற்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் இதுவரை 1500க்கும் அதிகமான எலும்பு கூடுகள் மட்டும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதேநேரம், 1800 ஆண்டுகள் ஆகியும் இந்த எலும்புக் கூடுகள் எரிமலை சாம்பலினால் போர்த்தப்பட்டு பாதுகாப்பாக இருந்துள்ளதுதான் ஆச்சரியம். அந்த சாம்பலின் வெப்பத்தாலும், சாம்பலில் உள்ள உப்புக்களாலும் இவை மம்மிக்கள் போன்று பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இருப்பினும் பல மனித எலும்பு கூடுகள் சிதைவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், முக்கியமான உலக சுற்றுலா தளங்களில் இத்தாலியில் உள்ள இந்த பொம்பெய் நகரமும் ஒன்றாக விளங்குகின்றது. வருடந்தோறும், 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து பார்வையிட்டு செல்வதாக தெரியவருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM