இன்றைய காலகட்டத்தில் யாரைப் பார்த்தாலும் ஒருவித மன அழுத்தத்துடன் இருப்பதைப் போல தோன்றும். அதற்கு பணிச்சுமை, குடும்பச்சூழல் போன்ற பல காரணங்களைக் குறிப்பிடலாம்.
மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது?
நமக்கு பிடிக்காத விடயங்களை மற்றவர்கள் திணிக்கும்போது ஒரு வித இறுக்கமான சூழ்நிலைக்குள் தள்ளப்படுகிறோம். இந்த இறுக்கமான சூழ்நிலை நம்மை மன அழுத்தத்துக்குள் தள்ளிவிடுகிறது.
நமக்கு மிகவும் பிடித்த ஒரு நபரின் இழப்பு நமக்கு அதிக கவலையை ஏற்படுத்தி ஒருவித மன அழுத்தத்துக்குள் கொண்டு செல்லும்.
தொடர்ச்சியான வேலை, ஜீரணக் கோளாறுகள், தலைவலி, சரியான உறக்கமின்மை போன்ற காரணங்களால் நீடித்த மன அழுத்தம் ஏற்படலாம். ஆனால், அதற்கு உடனடியாக நாம் மருத்துவரை அணுகினால் இதிலிருந்து விடுபடலாம்.
மன அழுத்தத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்?
உடல் மற்றும் மன அமைதிக்காக யோகா, உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை செய்யலாம்.
இறை வழிபாடு மனதை ஒரு நிலைப்படுத்தி மன அழுத்த்திலிருந்து விடுபட உதவி செய்யும்.
நெருங்கிய நண்பர்கள் அல்லது நம்பிக்கையான உறவினரிடம் மனம் விட்டு பேசலாம்.
இவை அனைத்தையும் செய்தாலும் மன அழுத்தத்திலிருந்து நிரந்தரமாக வெளியில் வர முடியாவிட்டால் சிறந்த மன நல ஆலோசகர் ஒருவரிடம் சென்று முறையாக சிகிச்சை பெறலாம்.
நல்ல இசை, பிடித்த புத்தகம் போன்றவை மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM