ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் (SLICLL) 2024ஆம் ஆண்டை மிகவும் சிறந்த நிதிரீதியான ஆண்டாக நிறைவு செய்துள்ளதுடன், வரிக்கு முந்திய இலாபமாக ரூ.30.7 பில்லியன் இலாபத்தை ஈட்டியுள்ளது. ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப், ரூ.26.3 பில்லியன் வலுவானதொரு GWP யினைப் பதிவு செய்துள்ளது மற்றும் நிறுவனத்தின் 25% வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
குறிப்பிடத்தக்க வகையில், டிசம்பர் 31, 2024 புள்ளிவிபரப்படி, ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப், (SLICLL), ரூ.5.3 பில்லியன் புதிய வணிக வியாபாரத்தை எட்டியதன் மூலம், 48% வளர்ச்சியைப் பதிவு செய்து, நிறுவனத்தின் வரலாற்றில் மிக உயர்ந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
வாடிக்கையாளர்கள் மீதான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் 2024ஆம் ஆண்டில் உரிமைக்கோரல் மற்றும் முதிர்வுக் கொடுப்பனவுகளாக ரூ.13.7 பில்லியனை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த புள்ளி விபரங்கள் நிறுவனத்தின் நிதி வலிமை மற்றும் அதன் கடமைகளை நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. காப்புறுதித்தொழிற் சந்தையின் தலைவராக தனது நிலையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஆயுள், தனது சொத்து மதிப்பை ரூ.237 பில்லியனாக உயர்த்தியதுடன், அதன் ஆயுள் நிதியத்தையும் ரூ.213.2 பில்லியனாக உயர்த்தியுள்ளது.
நிறுவன மாற்றங்கள் மற்றும் சவாலான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டதுடன் மேலும் கூடுதலாக, நிறுவனம் 319 MDRT வெற்றியாளர்களையும் உருவாக்கியுள்ளது. இது ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப், நிறுவனத்திற்கு இதுவரை இல்லாத அதிகபட்ச MDRT வெற்றியாளர்கள் ஆகும்.
தனது தனித்துவமான முதலீட்டு உத்திகள் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில், ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப், 2023ஆம் ஆண்டிற்காக தொழிற்துறையில் மிகப்பெரிய ஆயுள் காப்புறுதி இலாபப்பங்கினை (Bonus) அறிவித்தது.
இது ரூ.11.2 பில்லியன் ஆகும். கடந்த இரண்டு தசாப்தங்களாக, நிறுவனம் தொடர்ந்து தொழிற்துறையில் மிக உயர்ந்த போனஸ் கொடுப்பனவுகளை வழங்கி வருகிறது, ஒட்டுமொத்தமாக ரூ.104 பில்லியனைத் தாண்டிய போனஸ் கொடுப்பனவுகளுடன், ஒப்பிடமுடியாத இலக்கை எட்டியுள்ளது.
ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் இன் குழும தலைமை நிர்வாக அதிகாரி சந்தன எல். அளுத்கம கூறுகையில்,
'எங்களின் நிதிரீதியான அசாத்திய திறமை மேலும் எங்கள் குழு அர்ப்பணிப்புடன் சவால்களை ஏற்றுக்கொண்ட வினைத்திறனான செயல்பாற்றிக்கு இது ஒரு சான்றாகும்.
பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் உள்ளக மாற்றங்கள் இருந்தபோதிலும், எங்கள் மூலோபாய கவனம் எங்கள் சந்தை தலைமையை வலுப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் நாம் அடியெடுத்து வைக்கும்போது புதுமை, வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் தொழில்துறை தலைமைத்துவத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள உறுதிபூண்டுள்ளோம்.'
'ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப், அதன் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை நிரூபித்துள்ளது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் அதன் பங்கை வலுப்படுத்தும் அதே வேளையில் நிலையான வளர்ச்சியையும் வழங்குகிறது' என்று ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் இன் தலைவர் நுசித் குமாரதுங்க வலியுறுத்தினார்.
எங்கள் தொலைநோக்குப் பார்வை வணிக வெற்றியைத் தாண்டி நீண்டுள்ளது, பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலமும், அரசின் ஆதரவில் மக்கள் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலமும் தேசிய வளர்ச்சிக்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
நிதிரீதியான வெற்றிக்கு அப்பால், ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப், 2024ஆம் ஆண்டில் துறைசார் அங்கீகாரத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது. நிறுவனம் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக LMD பத்திரிகை சஞ்சிகையால் 'மக்களால் மிகவும் விரும்பப்படும் ஆயுட் காப்புறுதி நாமம்' என்று பெயரிடப்பட்டதுடன் 'மிகவும் மதிப்புமிக்க சிறந்த 100 நாமங்களில்' ஒன்றாகவும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தரவரிசைப் படுத்தப்பட்ட சிறந்த பத்து நிறுவனங்களில் '2024ஆம் ஆண்டுக்கான திறமையான முகாமைத்துவ செயற்பாடுகளுக்கான விருதால்' கௌரவிக்கப்பட்டதுடன் 'காப்புறுதி - பொதுத்துறை நிறுவனம்' என்ற பிரிவின் கீழ் வெற்றியும் பெற்றுள்ளது.
ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப், ISO 9001:2015, ISO/IEC 27001:2013 மற்றும் ISO 14064-1:2018 போன்ற சான்றிதழ்களை தனது அர்ப்பணிப்பான அசாத்திய திறமை மற்றும் சர்வதேச தரவரிசை செயற்பாடுகளுக்காக பேணி வருகின்றது.
உலக குழந்தைகள் தினத்தன்று புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இலவச ஆயுள் காப்புறுதித் திட்டம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1100 குடும்பங்களுக்கு ஆதரவளித்தல், பொசன் போயாவிற்கு அனுராதபுரத்திற்குச் செல்லும் யாத்திரிகர்களுக்கு அவசர உதவி வழங்குதல் மற்றும் தேசிய தேர்வுகளில் சிறந்து விளங்கும் 370 மாணவர்களுக்கு 'சுபபெத்தும்' உதவித்தொகைகளை வழங்குதல் உள்ளிட்ட சமூக பொறுப்புக்களிலும் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில், ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப், புதுமைகளை முன்னெடுப்பது, வாடிக்கையாளர் நம்பிக்கையை மேம்படுத்துவது மற்றும் சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றது. உறுதியான அடித்தளம் மற்றும் தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன், காப்புறுதித் துறையில் சிறந்து விளங்குவதுடன் மேலும் தலைமைத்துவத்தின் மரபைத் தக்க வைத்துக் கொள்ள நிறுவனம் அயராது உழைத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM