எல்.பீ. ஃபினான்ஸின் புதிய பரிவர்த்தனை அதிகாரியாக ரவி திசேரா !

10 Apr, 2025 | 11:48 AM
image

எல்.பீ. ஃபினான்ஸ் அதன் பிரதம பரிவர்த்தனை அதிகாரியாக (CTO) திரு. ரவிதிசேரா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றது.

நிறுவன ரீதியான மாற்றத்திற்கு வழிகாட்டுவதில் வலுவான நன்மதிப்பைக்கொண்டுள்ள திரு. ரவிதிசேரா, தனது நிறைவான அனுபவத்தையும் மூலோபாய நுண்ணறிவையும் நிறுவனத்திற்குக்கொண்டு வருகின்றார்.

திரு. ரவிதிசேரா 2008 ஆம் ஆண்டில் LOLC மைக்ரோகிறெடிட் லிமிட்டட்டை நிறுவி அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியாகக் கடமையாற்றினார். 2018ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் LOLC பினான்ஸ் பி.எல்.சி.யுடன் இணைந்தது.

2020 பெப்ரவரி வரை, திரு. திசேரா இந்த இணைந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதித்தலைவராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பணியாற்றினார்.

திரு. திசேராவின் நியமனம் பற்றி எல்.பீ. ஃபினான்ஸின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. நிரோஷன் உடகே கருத்து வெளியிடுகையில்,

“நிதிச்சேவைகள் துறை வளர்ச்சியடைந்து வரும் இந்தவேளையில் எமது செயற்றிறனை மேம்படுத்தவும் டிஜிட்டல் திறன்களை வலுப்படுத்தவும் எமது பங்குதாரர்களுக்கு நீண்டகாலப் பெறுமதியைப் பெற்றுக் கொடுக்கவும் அவரது தொலைநோக்கான தலைமைத்துவமும் மாற்றத்தைக்கொண்டு வரும் மனப்பான்மையும் எல்.பீ.ஃபினான்ஸ்க்கு மிகவும் அவசியமென நாம் நம்புகின்றோம்.

மாற்றத்தை ஏற்படுத்தும் வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை நோக்கி நாம் துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கும் இந்த வேளையில், தலைமைத்துவ அணி மற்றும் அனைத்து ஊழியர்களுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்” என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right