மருத்துவர்கள் நமக்கு தரும் மருந்து வில்லைகளில், சிலவற்றை தண்ணீரில் விழுங்கும் படி தெரிவிப்பார்கள். சிலவற்றை சப்பி சாப்பிடச்சொல்வார்கள். இன்னும் சிலவற்றை தண்ணீரில் கரைத்துக் குடிக்குமாறு தெரிவிப்பார்கள்.
ஆனால், நம்மில் சிலர் இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. எப்படி வில்லைகளை எடுத்தாலும், அவை வயிற்றுக்குத் தானே போகின்றன என அலட்சியமாக இருந்துவிடக்கூடும். ஆனால், மருத்துவர்கள் குறிப்பிடும் அந்த வேறுபாடுகளுக்கு, முக்கிய காரணம் இருக்கின்றது.
அவற்றை நாம் கவனத்திற் கொள்ளாத போது, சில எதிர்வினைகளுக்கும் முகங்கொடுக்க நேரிடலாம். ஆகையால், மருந்து வில்லைகளை எடுத்துக் கொள்வதில் கவனம் வேண்டும்.
இந்த வேறுபாடுக்கான காரணம் பற்றி மருத்துவர்கள் கூறுவது என்ன?
அதாவது, எந்த வயதினருக்கு, எந்தப் பிரச்சினைக்கு மருந்து வில்லைகள் கொடுக்கப்படுகின்றது என்பதைப் பொறுத்தே, இது தீர்மானிக்கப்படுமாம். அதாவது அந்த வில்லைகளானது, உடலின் எந்தப் பகுதியில் கிரகிக்கப்பட வேண்டுமோ அதைப் பொறுத்தும் அந்த வில்லைகளை எப்படி பயன்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.
சில வில்லைகளை சப்பி சாப்பிடச் சொல்வார்கள். அது வாயிலேயே கரைந்து, உமிழ்நீர் வழியே உடலுக்குள் போய் விடும். அதன் விளைவாக உடனடியாக அந்த மருந்து வேலை செய்யத் தொடங்கும்.
அதுபோல், சில வில்லைகளை தண்ணீரில் விழுங்கச் சொல்வது, அந்த மருந்து கல்லீரலுக்குள் போய், பிறகு வயிற்றுக்குள் போய், பிறகு சிறுகுடலுக்குள் சென்றுதான் உட்கிரகிக்கப்படும்.
இவை தவிர 'என்டெரிக்-கோட்டட்' (Enteric coated tablets) வகை மருந்து வில்லைகளில், ஒருவிதமான பூச்சு இருக்கும். இந்தப் பூச்சுகள் சில மருந்து வில்லைகள் அமிலத்தில் கரைந்து போவதைத் தடுப்பதற்காக போடப்படுகின்றனவாம்.
என்டெரிக்-கோட்டட் வில்லைகள் சிறுகுடலுக்குப் போய்தான் உட்கிரகிக்கப்படும்.
எனவே, வில்லைகளானது எங்கே உட்கிரகிக்கப்படுகிறது, எவ்வளவு நேரத்தில் உட்கிரகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே பரிந்துரைக்கப்படுகின்றது என்கின்றனர் மருத்துவர்கள்.
பொதுவாகவே மருந்து வில்லைகளில் ‘அசிடிக்’ மற்றும் ‘பேசிக்’ என இருவகை உண்டு. அதாவது அந்த வில்லையின் மூலக்கூறுகள் அசிடிக் தன்மை கொண்டவையாக இருந்தால், அவை வயிற்றுப்பகுதியில் உட்கிரகிக்கப்படும். அதுவே பேசிக் வகை மருந்து வில்லைகள் குடலில் உட்கிரகிக்கப்படும்.
எனவே, நோயாளியின் வயது, என்ன பிரச்சினை, அதன் தீவிரம் போன்ற பல விடயங்களைப் பொறுத்து, மருத்துவர் இதை முடிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM