அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் தொடர் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பை மேற் ­கொள்­ள­வுள்­ள­தாக எச்­ச­ரிப்­பதை நாம் கவ­னத்தில் கொள்­ள­வில்லை.  யாருடனும் பேச்­சு­வார்த்­தைக்கு செல்­லவோ அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தை  பேச்­சு­வார்த்­தைக்கு அழைக்­கவோ தயா­ராக இல்லை என சுகா­தார துறை அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். 

Image result for ராஜித சேனா­ரத்ன virakesari

அரச சொத்­துக்­களை சேத­மாக்­கி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக  கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். 

சுகா­தார அமைச்சின் ஏற்­பாட்டில் நேற்று தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில், 

சைட்டம் கல்­வி­ய­கத்தின் உறுதித் தனி­மையை நிலை­நாட்ட வேண்டும் என ஆரம்­பத்தில் போராட  ஆரம்­பித்த நபர்கள் இப்­போது சைட்டம் கல்­வி­ய­கத்தை  தடை­செய்ய வேண்டும் என போராட ஆரம்­பித்­துள்­ளனர். உண்­மையில் சைட்டம் மூடப்­பட வேண்டும் என்­பது இவர்­களின் நோக்கம் அல்ல . இதன் பின்­ன­ணியில் முழு­மை­யாக அர­சியல் நகர்­வு­களே உள்­ளன. அதேபோல் நேற்­றைய ( நேற்று முன்­தினம்) சம்­பவம் மிகவும் அரா­ஜ­க­மான வகையில் இடம்­பெற்­றது. ஆரம்­பத்தில் சிறு சிறு குழுக்­க­ளாக இணைந்து இறு­தியில் நான்­கா­யிரம் மாண­வர்­களை இணைத்­துக்­கொண்டு போராட்­டத்தை உக்­கி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளனர். 

சுகா­தார அமைச்சின் அரச சொத்­துக்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. அரச ஊழி­யர்­க­ளுக்கு காயங்கள் ஏற்­பட்­டுள்­ளன. போராட்டம் நடத்­து­வ­தற்கு  ஒரு­போதும் தடை­யென நாங்கள் கூறப்­போ­வ­தில்லை. நாங்­களும் போராட்­டங்­களை மேற்­கொண்டு அர­சி­ய­லுக்கு வந்­த­வர்கள். எனினும் இவ்­வாறு மோச­மான வகையில் வைத்­தி­யர்கள் செயற்­பட  வில்லை. சுகா­தார அமைச்சின் கத­வு­களை உடைத்­துக்­கொண்டு பிர­தான கட்­டி­டங்­களை ஆக்­கி­ர­மித்து எமது ஊழி­யர்கள் அனை­வ­ரையும் தள்ளி விழுத்­தி­கொண்டு இவ்­வாறு செயற்­படும் போதும் எமது ஊழி­யர்கள் அமை­தி­யா­கவே செயற்­பட்­டனர். 

எனினும் ஒரு கட்­டத்தின் பின்னர் எமது ஊழி­யர்­க­ளுக்கு அச்­சு­றுத்­தலும் எமது சொத்­துக்­க­ளுக்கும் சேதமும் ஏற்­பட்­டதை அடுத்தே நாம் பொலிஸ் பாது­காப்பை கோரினோம். எனினும் எந்த சந்­தர்ப்­பத்­திலும் மாண­வர்­களை தாக்கக் கூடாது என சுகா­தார அமைச்சின் அதி­கா­ரிகள் பொலி­ஸா­ருக்கு தெரி­வித்­தி­ருந்­தனர்.  பிற்­பகல் நான்கு முப்­பது மணி­ய­ளவில் நிலை­மைகள் மிகவும் மோச­மா­னதை அடுத்தே பொலிஸார் வேறு வழி­யில்­லாது தாக்­கு­தலை நடத்­தினர். 

நிலை­மை­களை கட்­டுப்­ப­டுத்தி சொத்­துக்­களை பாது­காக்க வேறு வழி­யில்­லாத நிலையில் விஷேட அதி­ரடி படை­யினர் மூலம் தடி­யடி நடத்­தப்­பட்­டது. இதில் எமது பக்கம் எந்த தவறும் இல்லை. மாண­வர்கள் அமை­தி­யாக பேச்­சு­வார்த்­தைக்கு வரு­வார்கள்  என்றால் நாமும் பொறு­மை­யாக எத்­தனை மட்ட பேச்­சுக்­க­ளையும் முன்­னெ­டுக்க தயார். ஆனால் இவ்­வாறு கட்­டி­டங்­க­ளையும், கண்­ணா­டி­க­ளையும், கத­வு­க­ளையும் உடைத்­துக்­கொண்டு மாண­வர்கள் மோச­மாக செயற்­படும் நிலையில் எமக்கும் பொறுமை காக்க முடி­யாது. 

இந்த சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் அர­சியல் வாதி­களின் தூண்­டுதல் உள்­ளது. முன்­னிலை சோஷ­லிச கட்­சியின் உறுப்­பி­னர்கள் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­யதை அனை­வரும் ஊட­கங்­களின் மூலம் அவ­தா­னித்­தனர். ஆகவே இந்த நட­வ­டிக்­கை­களின் பின்­னரும் எமக்கு அமை­தி­யாக செயற்­பட முடி­யாது. அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் தொடர் பணி­ப­கிச்­க­ரிப்பை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக கூறு­கின்­றனர். அதை நாம் கவ­னத்தில் கொள்­ள­வில்லை. எமது செயற்­பா­டுகள் தொடரும். வைத்­தி­ய­சா­லைகள் இயங்கும். அதேபோல் இவ்­வாறு குழப்பம் விளை­வித்த நபர்­களின் காணொ­ளிகள் கம­ராக்­களில் பதி­வா­கி­யுள்­ளன. 

அவற்றை பொலிஸார் பெற்­றுக்­கொண்­டுள்­ளனர்.எவ்­வாறு இருப்­பினும் 25 ஆயிரம் ரூபாய்க்கு அதி­க­மான சொத்­துக்­களை சேத­மாக்­கிய நபர்­க­ளுக்கு பிணை வழங்­கப்­ப­டாது. அதேபோல் அரச வைத்­தியர் சங்க அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ரா­கவும் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். 

இந்த சம்­ப­வத்தின் மூல­மாக பல மில்­லியன் ரூபா  அரச சொத்­துக்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. 16 வாக­னங்கள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. அதேபோல் சாதாரண  மக்களின் நிலைமைகளை கருத்தில் கொள்ளாது இவர்கள் மோசமாக நடந்துகொள்கின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் எம்மை பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என கூறுயுள்ளனர். யாருடனும் பேச்சுவார்த்தைக்கு செல்ல நாம் தயார் இல்லை. இவர்களை நாம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவும் இல்லை. கடுமையான நடவடிக்கைகளை எடுத்து இந்த பிரச்சினைகளை வேறு வகையில் கையாள நாம் முயற்சிக்கின்றோம் என்றார்.