குழந்தைகள் விரும்பி உண்ணும் பாசிப்பருப்பு பக்கோடா

09 Apr, 2025 | 06:46 PM
image

குழந்தைகள் விரும்பி உண்ணும் மொறுமொறு பாசிப்பருப்பு பக்கோடா  செய்வது எப்படி என்று பார்ப்போம்......

தேவையான பொருட்கள் ; 

  • பாசிப்பருப்பு - 1 கப் 
  • உளுத்தம் பருப்பு - 1/4 கப் 
  • பச்சரிசி - 1/4 கப் 
  • வெங்காயம் - 1  பொடியாக நறுக்கியது
  • இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது
  • பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
  • உப்பு - 1 தேக்கரண்டி  
  • பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  • ஓமம் - 1 தேக்கரண்டி 
  • கொத்தமல்லி இலை நறுக்கியது
  • எண்ணெய் - பொரிப்பதற்கு 

செய்முறை ; 

1. ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சரிசி சேர்த்து நன்கு கழுவி 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

2. பிறகு தண்ணீர் இன்றி சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

3. மாவை பாத்திரத்திற்கு மாற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, பெருங்காயத்தூள், ஓமம், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.

4. கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் தயார் செய்த மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right