வரு­மானம் கிடைக்­கின்­றது என்­ப­தற்­காக தாய்­லாந்து நாட்­டைப்போல் விப­சா­ரத்­தினை இந்­நாட்­டிலும் முன்­னெ­டுப்­ப­தற்கு இட­ம­ளிப்­பீர்­களா  என சபையில் கேள்வி எழுப்­பிய தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சீனித்­தம்பி யோகேஸ்­வரன் கல்­கு­டாவில் அமைக்­கப்­படும் மது­பான உற்­பத்தி நிலை­யத்­திற்கு ஆத­ர­வாக குர­லெ­ழுப்பும் புத்­தி­ஜீ­வி­க­ளையும் கடு­மை­யாக சாடினார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை  நடை­பெற்ற  மது­வரிக் கட்­டளைச் சட்­டத்தின் கீழான இரண்டு ஒழுங்­கு­வி­தி­களை அங்­கீ­க­ரிப்­பது தொடா­பான விவா­தத்தில் கலந்து கெண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

மட்­டக்­க­ளப்பு மாவட்டம் மிகவும் நெருக்­க­டி­களை சந்­தித்து வரும் ஒரு மாவட்­ட­மாகும். 2009ஆம் ஆண்­டுக்கு  முன்னர் யுத்­தத்தின் கார­ணத்­தினால்   பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. தற்­போது அதற்கு பின்­ன­ரான காலத்தில் இம்­மா­வட்­டத்­தினை வறுமை வாட்­டிக்­கொண்­டி­ருக்­கின்­றது.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தினை பொறுத்­த­வ­ரையில் 2009ஆம் ஆண்­டுக்கு பின்னர் மது­பா­னச்­சா­லைகள் பல தோற்றம் பெற்­றன. தற்­போது இம்­மா­வட்­டத்தில் 66 மது­பான சாலைகள் காணப்­ப­டு­வ­தோடு அங்­குள்ள சுற்­றுலா விடு­தி­களில் 67மது பான­சா­லைகள் காணப்­ப­டு­கின்­றன. 

இலங்­கை­யி­லேயே அதி­க­ளவு மது­பா­ன­சா­லை­க­ளைக்­கொண்ட மாவட்­ட­மாக மட்­டக்­க­ளப்பே காணப்­ப­டு­கின்­றது. மட்­டக்­க­ளப்பின் உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்­திக்­காக ஆயிரம் மில்­லியன் ரூபாவே ஒதுக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் வரு­ட­மொன்­றுக்கு மட்டும் மட்­டக்­க­ளப்பில் மது­பா­னத்­திற்­காக 4800மில்­லியன் ரூபாக்கள் செல­வி­டப்­ப­டு­கின்­ற­மைக்­கான பதி­வுகள் உள்­ளன.

2016ஆம் ஆண்டு மட்டும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 41இலட்­சத்து 91ஆயி­ரத்து 891லீற்றர் மது­பானம் நுக­ரப்­பட்­டுள்­ள­தாக பதி­வுகள் உள்­ளன. இதற்­காக செல­வி­டப்­பட்ட தொகை 281கோடி­யி­னையும் தாண்­டி­ய­தா­கவே காணப்­ப­டு­கின்­றது.

இத்­த­கைய நிலை­மையில் தற்­போது கல்­கு­டாவில் உள்ள கும்­பு­று­மு­னையில் மது­பா­னத்­தினை உற்­பத்தி செய்­வ­தற்­கான நிலை­ய­மொன்று  நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

இதற்கு நாம் மாவட்ட அபி­வி­ருத்தி குழு கூட்­டத்­திலும், பிர­தேச சபை­யிலும் அதனை நிறுத்த வேண்டும் என்ற தீர்­மா­னங்­களை மேற்­கொண்டு அறி­வித்தல் விடுத்­துள்ளோம். கிழக்கு மாகாண சபையும் எதிர்ப்பு தீர்­மா­னத்­தினை அறி­வித்­துள்­ளது. 

எனினும் அந்த நிர்­மா­ணப்­பணி தற்­போது வரையில் நிறுத்­தப்­பட்­ட­தாக இல்லை. இவ்­வா­றான நிலையில் அந்த நிறு­வனம் அப்­ப­கு­திக்கு தொழில் வாய்ப்­பி­னையும், நெல்­விற்­பனை மூலம் வரு­மா­னத்­தி­னையும் பெற்­றுத்­தரும் என்று புத்­தி­ஜீ­விகள் என கூறும் சில வைத்­தி­யர்கள் உள்­ள­டங்­கிய உறுப்­பி­னர்கள் பிர­சா­னங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். 

உண்­மை­யி­லேயே மட்­டக்­க­ளப்பில் ஏற்­க­னவே மது­பான நிலை­யங்கள் அதி­க­ரித்து அம்­மா­வட்­டத்­தினை தொடர்ந்தும் வறுமை, வாழ்­வாதா நெருக்­கடி என்­பன வாட்டி வதைக்­கின்ற  பின்­னி­லை­யி­லேயே  இவ்­வா­றா­ன­தொரு நிறு­வனம் அவ­சி­யமா என்­பதை ஒரு­நொடி சிந்­தித்து பார்க்க வேண்டும். 

சமு­கத்தின் எதிர்­காலம் தொடர்­பாக சிந்­திக்கும் வைத்­தி­யர்கள் புத்­தி­ஜீ­விகள் இது தொடர்­பாக சரி­யான நிலைப்­பாட்­டினை எடுத்து மக்­க­ளுக்கு விளிப்­பூட்டும் நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்து வரு­கின்­றார்கள். முஸ்லிம் சகோ­தர்­களும் இந்த விடத்தில் சரி­யான நிலைப்­பாட்­டினை கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இந்­நி­லையில் நாம் போதை­யற்ற நாட்­டினை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தனை இலக்­காக கொண்டு செயற்­படும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டத்தில் இந்த நிர்­மா­ணத்­தினை உடன் தடுத்து நிறுத்­து­மாறு அம்­மா­வட்ட மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக மகஜரொன்றை அளித்துள்ளோம். 

அதனை அடுத்து அவர் குறித்த விடயம் தொடர்பிலான விசாரணை மேற்கொள்வதற்கு குழுவொன்றை நியமித்துள்ளார். அந்த குழு நியாயமான அறிக்கையை வெளியிடும். ஆதன் பிரகாரம் ஜனாதிபதி நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகின்றோம்.

அத்துடன் மட்டக்களப்பில் அதிகரித்துக் காணப்படும் மதுபானச் சாலைகளை குறைப்பதற்கு அல்லது அவற்றை மூடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோருகின்றேன் என்றார்.