இரவில் தூக்கம் வரவில்லையா? இதனை செய்யுங்கள்

09 Apr, 2025 | 05:46 PM
image

இரவில் தூக்கமின்மை பிரச்சினையால் பெரும்பாலானோர் அவதிப்படுகின்றனர். 

இரவு நேரத்தில் நல்ல தூக்கம் வருவதற்கு வைத்தியர்கள் சில வழிமுறைகளை கூறியுள்ளனர். இதனை கடைப்பிடித்தால் தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். 

1) இரவில் நீல நிற ஒளியை தவிர்த்து மங்கலான சிவப்பு நிற விளக்குகளை பயன்படுத்தவும்

2) உறங்கச் செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னர் தொலைக்காட்சி, கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.  

3) இரவு நேரத்தில் வேலை செய்வதை தவிர்க்கவும்.  

4) உறங்கச் செல்வதற்கு முன்னர் 15 நிமிடம் கண்களை மூடி சுவாசத்தை உள்ளீர்த்து வெளிவிடுங்கள். 

5) இரவு நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்

6) நேரத்துக்கு இரவு உணவை உண்ணுங்கள் (07.00 மணி முதல் 08.00)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right