அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி தொடர்பில் அரசாங்கம் மந்தகரமாக செயற்படுகிறது - நாமல் ராஜபக்ஷ

09 Apr, 2025 | 07:18 PM
image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய தீர்வை வரி தொடர்பில்  அரசாங்கம்  மந்தகரமாக செயற்படுகிறது.  வரி விதிக்கப்பட்டதன் பின்னர் தான் குழு நியமிக்கப்பட்டுள்ளது.    அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு  முழுமையான  ஒத்துழைப்பு வழங்குவோம் என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற  சேர் பெறுமதி (திருத்தச் )  சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும்   உரையாற்றியதாவது,

தீர்வை வரி உலகளாவிய ரீதியில் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. இலங்கையின் சேவை மற்றும இதர துறைகளும் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சாத்தியம் காணப்படுகிறது.

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையினால் பெரும்பாலான வலய நாடுகள் திறந்த பொருளாதார  கொள்கைக்கு  அப்பாற்பட்டு  செயற்பட  உத்தேசித்துள்ளன.

நாடு என்ற ரீதியில் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிக்கொள்வது  என்பது அரசாங்கத்துக்கு சவால்மிக்கது. அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள 44 சதவீத தீர்வை வரியை எவ்வாறு  முகாமைத்துவம் செய்வது.  அமெரிக்காவின்  புதிய வரி கொள்கை தொடர்பில் பெரும்பாலான நாடுகள்   இரண்டு மாதங்களுக்கு   முன்னர்  இருந்தே அமெரிக்காவுடன்   பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

ஆனால் இங்கு  வரி விதிக்கப்பட்டதன்  பின்னரே  அரசாங்கம்  குழு அமைத்து  ஆய்வு செய்ய தீர்மானித்துள்ளது. அமெரிக்காவின் தீர்மானம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நெருக்கடியான நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துiழைப்பு வழங்குவோம். 

தொழிற்சங்கங்களை தூண்டிவிட்டு வீதிக்கு இறக்கி மக்களை நெருக்கடிக்குள்ளாக்கமாட்டோம். பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு எவ்வாறு  அமெரிக்காவின்  தீர்மானத்தை முகாமைத்துவம் செய்வது என்பதை  அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

ஒருசில உள்ளூராட்சி மன்றத் பிரதேச சபைகளுக்கான தேர்தல் பணிகளை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. தடை விதிக்கப்பட்டுள்ள பிரதேச சபைகள் தொடர்பில்    தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படவில்லை.   மே 05 ஆம் திகதி எந்த பிரதேச சபைக்கு தேர்தல்  நடைபெறும் என்பதை  அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுவாஞ்சிகுடி நகைக் கடையில் தங்கக் காப்பைத்...

2026-07-11 17:34:28
news-image

மகரகமவில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில்...

2026-07-11 17:29:36
news-image

பண்டாரவளை பாடசாலை ஆய்வுகூட விபத்தில் காயமடைந்த...

2026-07-11 16:42:55
news-image

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வளாகங்களை...

2026-07-11 15:52:56
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சேதங்கள் குறித்து...

2026-07-11 15:33:05
news-image

பொருளாதார நெருக்கடியை திசைதிருப்பவே கைதுகளும் குற்றத்தடுப்பு...

2026-07-11 15:32:14
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 166 பெண்...

2026-07-11 14:57:59
news-image

திறைசேரி நிதி மோசடி: 2.5 மில்லியன்...

2026-07-11 14:52:00
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: ஐநா மனித...

2026-07-11 14:40:33
news-image

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி 31 வயதுடைய...

2026-07-11 14:01:57
news-image

பதுளையில் தனியார் ஆய்வகங்களில் காலாவதியான மருத்துவ...

2026-07-11 13:19:57
news-image

நாட்டில் பலத்த காற்று வீசக்கூடும் :...

2026-07-11 13:10:48