• தினமும், காலை, இரவு ஆகிய இரண்டு நேரமும் பல்துலக்க வேண்டும். ஒவ்வொருவேளை உணவருந்தியதும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
• அதிக காரமில்லாத பற்பசையோ, பவுடரோ நல்லது. நுரை அதிகம் வரும் பற்பசை ஒரு பொருட்டல்ல. அதில் ஒருமுறையாவது விரலால் பல் தேய்க்க வேண்டும்.
• கரி, உப்பு, செங்கல் தூள் போன்ற கடின பொருட்களால் அடிக்கடி பல் தேய்ப்பதைத் தவிர்க்கவும்.
• அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளையோ, பானங்களையோ தவிர்க்கவேண்டும்.
• இனிப்பு, சொக்லேட் போன்றவற்றை முடிந்தளவு கடித்து சாப்பிடாமல் சுவைத்து சாப்பிடுவதே சிறந்தது. பின்னர் நன்கு வாயை கொப்பளித்துவிட வேண்டும்.
• ஆலும், வேலும் பல்லுக்குறுதி என்பதெல்லாம் அந்தக்காலம். அந்த குச்சிகளை வைத்து தேய்க்க தெரியாமல் தேய்த்தால் ஈறுகள் புண்ணாகி விடக்கூடும்.
• மூன்று வருடங்களுக்கு ஒருமுறையாவது பல் மருத்துவர்களிடம் சென்று சுத்தம் செய்து கறைகளை நீக்கிக்கொள்ளவேண்டும்.
• சாப்பிட்ட பின்னர் வாயில் எஞ்சியிருக்கும் உணவுத் துகள்களே பக்டீரியாக்கள் பெருகும் இடங்கள். எனவே, ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்ததும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.
• இரவு படுக்கும்போது உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்துவிட்டுப் படுப்பது பற்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.
• பற்களை நீண்ட நேரம் துலக்கக் கூடாது. ஏனெனில், அது பல்லின் வெளிப்புறத்தில் உள்ள எனாமலைத் தேய்த்துவிடும். மேற்புற ஈறுகளை மேலே இருந்து கீழாகவும், கீழ்ப்புற ஈறுகளை கீழே இருந்து மேலாகவும் விரலால் அழுத்தித் தேய்த்தால், ஈறுகள் பற்களுடன் வலுவாக இணைந்திருக்கும். உணவுத் துகள்கள் பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையில் தங்காது. பக்டீரியா தொற்றுக்கான வாய்ப்புகள் குறையும். துர்நாற்றமும் ஏற்படாது. ஈறுகளில் வீக்கமும் இரத்தக் கசிவும் ஏற்படாமல் பற்கள் பாதுகாக்கப்படும்.
• பற்சிதைவு ஆரம்பத்தில் ஒரு சிறிய கரும்புள்ளி போலப் பல்லின் மேற்பரப்பில் தோன்றும். இந்த நிலையிலேயே பல் மருத்துவரைச் சந்தித்து உரிய ஆலோசனையும் சிகிச்சையும் பெற்றால் மேற்கொண்டு பல் சொத்தை ஆகாமல் பாதுகாக்கலாம். ஆனால், மிக ஆழமாகக் குழி உண்டாகி, நரம்பு வரையிலும் பற்சிதைவு ஏற்பட்டிருந்தால் பற்களைப் பிடுங்கி எடுக்க வேண்டிய அவசியம் உருவாகும். ஆனால் அதற்கு முன்பே பல் மருத்துவரை நாடினால், வேர் சிகிச்சை (Root canal treatment) மூலம் பயன்பெறலாம்.
• பற்களை பிடுங்கியிருந்தால், ஒரு மாதத்தில் இருந்து ஆறு மாதங்களுக்குள் செயற்கைப் பற்களைப் பொருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மேற்பற்கள் கீழே இறங்கவோ அல்லது கீழ்ப் பற்கள் மேலே ஏறவோ அல்லது பக்கவாட்டுப் பற்கள் சரியவோ கூடும். இதைத் தவிர்த்து எஞ்சிய பற்களைப் பாதுகாக்கப் பொய்ப் பற்கள் கட்டிக்கொள்வதுதான் நல்லது.
• பற்களால் நகத்தைக் கடித்தல், பென்சில் போன்ற பொருட்களைக் கடித்தல், குண்டூசி மற்றும் குச்சியால் பற்களைக் குத்துதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது. இவை பற்களில் நோய்த் தொற்றினை ஏற்படுத்திவிடும்.
• மென் பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள அமிலங்கள் பற்களில் உள்ள எனாமலைப் பாதிப்பதோடு பற்களையும் அரிக்கின்றன. பானங்களைக் குடித்தே ஆக வேண்டிய சமயங்களில் இயன்றவரை ஸ்ட்ரோ மூலம் அருந்தலாம்.
• பால் போத்தலில் பால் அருந்தியவுடன் குழந்தைகள் அப்படியே உறங்கிவிடும். இந்த சமயத்தில், வாயில் இருக்கும் பக்டீரியாக்கள் பாலுடன் வினை புரிந்து அமிலம் உருவாகி, பால் பற்கள் பாதிக்கப்படும். எனவே, குழந்தை பால் குடித்த பிறகு சிறிது தண்ணீரைக் குடிக்கச் செய்வது அவசியம்.
• பற்களின் பாதுகாப்புக்கும் இரத்தத்தில் இருக்கும் சீனியின் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் வர வாய்ப்பிருப்பதால், இரத்தத்தில் சீனியைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
• புகையிலை மற்றும் மதுப் பழக்கம் ஈறுகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதால், அவற்றைத் தவிர்ப்பது பல் பாதுகாப்புக்கு உதவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM