(எம்.நியூட்டன்)
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உலக சுகாதார நாளை சிறப்பிக்கும் ஒன்று கூடல் புதன்கிழமை (09) காலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் த.பேரானந்த ராஜா அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
கிறிஸ்தவ நெறி ஆசிரியர் மாணவி சுதாகர் கமலினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உடற்கல்வி நெறி ஆசிரிய மாணவி விமல்ராஜ் உஷாநந்தினி உடற் பருமனை பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மூத்த விரிவுரையாளர் சுரேந்திரன் சிவலோசனி அதிதி அறிமுக உரையை ஆற்றினார்.
அதிதியாக கலந்து கொண்ட வைத்திய நிபுணர் த. பேரானந்தராஜா கலாசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.
கடந்த புதன்கிழமையும் (02) உலக சுகாதார நாள் சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது இதன்போது அமெரிக்க சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பேராசிரியர் தவம் தம்பிபிள்ளை அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM