(எம்.சி.நஜிமுதீன்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்வரும் மூன்று மாத காலபகுதி தீர்க்கமான காலப்பகுதியாக அமையவுள்ளது. ஏனெனில் குறித்த காலப்பிரில் இடம்பெறும் விடயங்களை அடிப்படையாக் கொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. மேலும் நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த இரு வருட ஆட்சி தொடர்பில் தனிப்பட்ட வகையில் தனக்கு திருப்தியில்லை என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.