யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Published By: Vishnu

09 Apr, 2025 | 04:11 AM
image

யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் செவ்வாய்க்கிழமை (8) கைது செய்யப்பட்டுள்ளார். 

வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகினை கடலினுள் வழிமறித்து சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா பொதிகள் காணப்பட்டன. 

அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியை சேர்ந்த படகோட்டியை கைது செய்த கடற்படையினர் கஞ்சா போதைப்பொருளுடன் படகினையும் கைப்பற்றினர். 

கைப்பற்றப்பட்ட கஞ்சா கடல் நீரில் நனைந்த நிலையில் காணப்பட்டதாகவும் , ஈரத்துடன் அதன் எடை 304 கிலோ 600 கிராம் என தெரிவித்த கடற்படையினர் அதன் பெறுமதி சுமார் 12 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகு என்பவற்றுடன், கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜகிரியவில் 300 வீடுகளை நிர்மாணிக்க அமைச்சரவை...

2026-01-20 17:52:25
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2026-01-20 16:27:36
news-image

இலங்கை காப்புறுதி நிறுவன சட்ட மூலத்தை...

2026-01-20 17:29:24
news-image

களுவாஞ்சிக்குடியில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மீன்கள்...

2026-01-20 17:30:24
news-image

பேஸ்லைன் வீதியை விரிவுபடுத்தும் திட்டத்தின் மூன்றாம்...

2026-01-20 16:45:08
news-image

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள்...

2026-01-20 16:34:05
news-image

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் கூட்டணியை...

2026-01-20 16:49:00
news-image

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர்...

2026-01-20 16:17:04
news-image

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோரின் மேன்முறையீட்டு...

2026-01-20 14:44:00
news-image

கிவுல்ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க...

2026-01-20 16:33:11
news-image

கிளிநொச்சியில் கடல் அட்டைகளுடன் 13 பேர்...

2026-01-20 14:32:20
news-image

வரவு - செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள...

2026-01-20 15:19:48