(எம்.சி.நஜிமுதீன்)

பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று சுகாதரா அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்து அங்குள்ள அதிகாரிகளுக்கு நெருக்கடிகைள ஏற்படுத்தியதுடன் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளனர். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே அச்செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதுடன் சி.சி.டி.வி. கெமரா பதிவின் உதவியுடன் அவர்களுக்கு  எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 

மேலும் இராணுவத்தினர் சட்டத்திற்கு எதிராகச் செயற்படுகின்ற  நிலையிலும், அவர்கள் இராணுவத்தினர் என்பதால் தண்டனை வழங்க வேண்டாம் என சிலர் குறிப்பிடுகின்றனர். அவ்வாறில்லை, சீருடையில் உள்ளவர்களும் தமது வகிபாகத்திற்கு அப்பாற் சென்று செயற்பட்டால் அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். 

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.