பான் ஏசியா வங்கி கூட்டுத்தாபனம் பிஎல்சி ஆனது சர்வதேச வன தினத்தைக் கொண்டாடும் விதமாக, , அதன் நிலைபெறுதகு தன்மைக்கான குழுவின் மூலம் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் சிறப்பு மரம் நடும் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை ஆதரவிற்கான வங்கியின் நீண்டகால உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
இந்த நிகழ்வில் வங்கியின் பணிப்பாளர் /பிரதம நிறைவேற்றதிகாரி அதிகாரி, வங்கியின் பெருநிறுவன முகாமைத்துவ குழு உறுப்பினர்கள், நிலைபெறுதகு தன்மைக்கான குழுவினர் மற்றும் விகாரமஹாதேவி பூங்கா அலுவலகத்தினர் மற்றும் கொழும்பு மாநகரசபை (CMC) அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மர நடுகை வாரத்தின் உத்தியோகப்பூர்வ தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், பணிப்பாளர் /பிரதம நிறைவேற்றதிகாரி மற்றும் நிலைபெறுதகு தன்மைக்கான குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் இரண்டு அரிய மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகளை அடையாளமாக நட்டனர்.
தனித்துவமான பண்புகள் மற்றும் அரிதான தன்மைக்கு பெயர் பெற்ற லிக்னம் விட்டே மற்றும் கண்டில் புரூட் எனும் இந்த தாவர இனங்கள், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதற்கும், இலங்கையில் பூர்வீக மற்றும் அரிய தாவரங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நளீன் எதிரிசிங்க, நிலையான நடைமுறைகளை முன்னெடுப்பதில் நிதி நிறுவனங்கள் வகிக்கக்கூடிய முக்கிய பங்கினை வலியுறுத்தினார்:"சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒரு பெருநிறுவன பொறுப்பாக மட்டுமல்லாது அது ஒரு பகிரப்பட்ட சமூகக் கடமையாகவும் திகழ்கிறது.
பான் ஏசியா வங்கியில், இது தொடர்பான எமது முயற்சிகள் அடிப்படைக் கோட்டிற்கு அப்பால் பரந்துள்ளன. எமக்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பிலும் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான மாற்றத்தைக் கொண்டுவர நாங்கள் முயல்கிறோம். இன்று இந்த மரக்கன்றுகளை நடுவதன் மூலம், பசுமையான எதிர்காலத்திற்கான தொடர்ச்சியான நடவடிக்கையை ஊக்குவிக்க முடியும் என்றுநாம் நம்புகிறோம்."
பான் ஏசியா வங்கியின் நிலைபெறுதகு தன்மைக்கான குழு, மீள்காடமைத்தல், கார்பன் தடயங்களைக் குறைத்தல் மற்றும் நிலையான வர்த்தக நடைமுறைகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தேசிய மற்றும் உலகளாவிய இலக்குகளுடன் இணங்கக்கூடிய முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
புகைப்பட விளக்கம் : பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நளீன் எதிரிசிங்க, பெருநிறுவன முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள், நிலைபெறுதகு தன்மைக்கான குழு, மற்றும் விஹாரமஹாதேவி பூங்கா அலுவலகம் மற்றும் கொழும்பு மாநகரசபை CMC) அதிகாரிகள் இந்த நிகழ்வில் காணப்படுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM