‘Discover Mannar’புகைப்படக் கண்காட்சி கொழும்பில் ஆரம்பம்

Published By: Priyatharshan

22 Jun, 2017 | 04:24 PM
image

இலங்கை புகைப்படச் சங்கம் (PSSL), உலக வங்கியின் துணை நிறுவனமான IFC மற்றும் பல்மிரா ஹவுஸ் ஆகியன இணைந்து ‘Discover Mannar’ புகைப்பட கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன. 

இலங்கையின் சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக மன்னாரை பிரபல்யப்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவியின் கீழ் இந்த கண்காட்சியில் நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் சாதாரண புகைப்படங்களை காட்சிப்படுத்துவதற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டிருந்தன. 

இந்த கண்காட்சி பார்க் ஸ்ரீட் மியுவ்ஸ். ஸ்டேபிள்ஸில் கடந்த வாரம் நடைபெற்றது. மே மாதத்தில் நடைபெற்ற இந்த புகைப்பட போட்டியில், 300க்கும் அதிகமான புகைப்படங்கள் திறந்த மற்றும் மாணவர் பிரிவுகளில் வெளிப்படுத்தியிருந்தனர். இவற்றில், 16 புகைப்படவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, நிகழ்வில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

மன்னாரை நிலைபேறான, பொறுப்பு வாய்ந்த சுற்றுலா பகுதியாக ஊக்குவிக்கும் வகையில் EU-SDDP  நிகழ்ச்சியின் கீழ் IFC முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது. 

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான IFC ன் முகாமையாளர் அமீனா ஆரிஃவ் கருத்துத் தெரிவிக்கையில்,

“சுற்றுலாத்துறை என்பது முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார அங்கமாக அமைந்துள்ளது. இதனூடாக தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதுடன், சந்தைகளுக்கான அணுகலை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், உள்ளூர் சமூகங்களுக்கு அனுகூலங்களை பெற்றுக்கொடுக்கக்கூடியதாக அமைந்திருக்கும். இந்த கண்காட்சியினூடாக, இலங்கையில் மறைந்துள்ள பொக்கிஷங்கள், பன்முகத்தன்மை மற்றும் தினசரி வாழ்க்கை ஆகியவற்றை வெளிப்படுத்தவுள்ளதையிட்டு பெருமை கொள்கிறோம்” என்றார்.

உலகின் பிரதான சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை வளர்ச்சியடைந்துள்ளது, நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய அங்கம் வகிக்கிறது.

இந்நிகழ்வில், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் கூட்டாண்மை தலைமை அதிகாரி லிபுசே சவுகுபோவா கருத்துத் தெரிவிக்கையில்,

“உலகின் பெருமளவானோர் நாடும் சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை வளர்ச்சியடைந்த வண்ணமுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிக்கக்கூடிய வசதி காணப்படுகிறது. 

மன்னார் நகரை சுற்றுலாத்துறைiயில் பிரபல்யம் பெற்ற நகராக ஊக்குவிப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்துவதுடன், இது மன்னாரின் பொருளாதாரத்துக்கும், வசிப்பாளர்களுக்கும் உதவும் வகையில் அமைந்திருக்கும்” என்றார்.

இந்த புகைப்பட போட்டி PSSL நிபுணர்களின் வழிகாட்டல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. PSSL ன் தலைவர் ஹிரான் வெலிவிட்டிகொட கருத்துத் தெரிவிக்கையில்,

“IFCமற்றும் பல்மிரா ஹவுஸ் ஆகியவற்றுடன் கைகோர்த்து இந்த போட்டியை முன்னெடுக்கவுள்ளதையிட்டு இலங்கை புகைப்பட சங்கம் பெருமை கொள்கிறது. மன்னார் நகரின் பன்முகத்தன்மை மற்றும் விசேடத்துவம் இதனூடாக வெளிப்படுத்தப்படவுள்ளது. முறையாக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படவுள்ள இந்த கண்காட்சிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

பல்மிரா ஹவுஸ் முகாமைத்துவ பணிப்பாளர் அஜித் ரத்நாயக்க நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கையில் காணப்படும் பன்முகத்தன்மை வாய்ந்த பிரதேசங்களில் ஒன்றாக மன்னார் திகழ்வதுடன், பயணிகளுக்கு பெருமளவு அனுபவங்களை பெற்றுக்கொடுத்த வண்ணமுள்ளது. குறிப்பாக பறவைகள் ஆர்வலர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அனுபவங்களை பெற்றுக்கொடுக்கிறது. இதுபோன்ற கண்காட்சிகளின் மூலமாகரூபவ் மன்னாரை நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் ஒன்றாக ஊக்குவிக்கப்படுவதுடன்ரூபவ் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட வேண்டிய முக்கிய பகுதிகளில் ஒன்றாகவும் பிரபல்யப்படுத்தப்படுகின்றது” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்