உயிரணு குறைபாடு பாதிப்பிற்கான சிகிச்சை

08 Apr, 2025 | 03:48 PM
image

இன்றைய சூழலில் திருமணமான ஆண்கள் உயிரணு குறைபாடு தொடர்பான பாதிப்பிற்கு ஆளாகுவது அதிகரித்து வருவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. உளவியல் மற்றும் சமூகவியல் காரணங்கள் இருந்தாலும் விந்தணு உற்பத்தி குறைபாட்டிற்கு உடலியல் ரீதியாகவும், மரபணு ரீதியாகவும் கோளாறு இருப்பதாக வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

மேலும் இதற்கு தற்போது நவீன முறையிலான பரிசோதனைகளும், சிகிச்சை முறைகளும் அறிமுகமாகி பலன் அளித்து வருவதாகவும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்றைய சூழலில் திருமணமான தம்பதிகளில் 30 சதவீதத்தினர் மகப்பேறு இன்மை பாதிப்பினை எதிர்கொள்கிறார்கள். இதில் சரி பாதி சதவீதத்தினர் ஆண்கள். இவர்களில் பெரும்பான்மையோருக்கு உயிரணு உற்பத்தியில் ஏற்படும் குறைபாட்டின் காரணமாகவே தந்தையாக முடியாமல் தவிக்கிறார்கள்.

எம்முடைய விதைப்பையில் உயிரணு உற்பத்தி நடைபெறுகிறது. 72 நாட்களுக்கு ஒரு முறை உயிரணு உற்பத்தி இயல்பாக நடைபெறும்.

ஒவ்வொரு ஆணிடத்திலும் உள்ள வலது மற்றும் இடது புற விதைப்பையில் உற்பத்தியாகும் உயிரணுக்களின் எண்ணிக்கை ஒரு மில்லிலிற்றரில் 15 மில்லியனுக்கு மேல் வீரியமிக்க உயிரணுக்கள் இருந்தால் அவர்களால் இயற்கையான முறையில் தந்தையாக முடியும். இந்த எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலோ அல்லது ஐந்து மில்லியனுக்கு கீழ் உயிரணுக்கள் எண்ணிக்கை இருந்தாலோ வைத்திய தொழில்நுட்பங்களின் உதவியுடன் இவர்கள் தந்தையாக முடியும்.

உயிரணுக்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்பட்டால், அதை உறுதிப்படுத்திக்கொள்ள வைத்திய நிபுணர்கள் குருதி பரிசோதனை, விதைப்பை திசு பரிசோதனை, ஹோர்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பர்.

இதன் மூலம் உயிரணுக்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணத்தை வைத்தியர்கள் துல்லியமாக அவதானிப்பார்கள்.  இதனைத் தொடர்ந்து பி.ஆர்.பி சிகிச்சை, சத்திர சிகிச்சை, தொற்று பாதிப்பிற்கான சிகிச்சை , ஹோர்மோன் சுரப்பியின் ஏற்படும் பாதிப்பை சீராக்குவதற்கான சிகிச்சை போன்ற சிகிச்சைகளை பிரத்யேகமாகவோ, ஒருங்கிணைந்தோ வழங்கி நிவாரணத்தை அளிப்பர்.

மேலும் இத்தகைய சிகிச்சையின் போது வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் வைத்து நிபுணர்கள் பரிந்துரை செய்வார்கள். இதனை உறுதியாக கடைப்பிடித்தால் உயிரணு உற்பத்தி குறைபாட்டில் ஏற்படும் பற்றாக்குறையை நீங்கி, இயல்பான முறையிலோ அல்லது ஐ வி எஃப் எனப்படும் செயல்முறை கருத்தரிப்பின் மூலமாகவோ தந்தையாக இயலும்.

வைத்தியர் ஐஸ்வர்யா

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிசேரியனுக்கு பின்னராக முதுகு வலி தீர்வு...

2025-04-17 17:34:21
news-image

புற்றுநோய் ஆபத்தை உருவாக்கும் ஞானப்பல்? 

2025-04-16 19:44:45
news-image

வெறும் 10 நாட்கள் போதும்… வித்தியாசத்தை...

2025-04-16 16:00:35
news-image

பயத்தில் நமது உடல் உறுப்புகள்..!

2025-04-16 15:34:29
news-image

சுவைக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் சிறந்தது கோணப்...

2025-04-16 12:55:52
news-image

லாரிங்கோபார்னீஜியல் ரிஃப்ளெக்ஸ் எனும் தொண்டை பாதிப்பிற்குரிய...

2025-04-16 03:48:16
news-image

கறுப்பு நிற உணவுகளில் உள்ளடங்கியிருக்கும் சத்துக்கள்

2025-04-13 12:52:03
news-image

கிரியாட்டீன் பவுடரை பாவித்தால் பக்கவிளைவு ஏற்படுமா?

2025-04-12 17:37:22
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் அதியுயர் வெப்பநிலை...

2025-04-11 16:30:48
news-image

பாடாய் படுத்தும் மன அழுத்தத்திலிருந்து விடுபட...

2025-04-10 14:24:20
news-image

பற்களின் பாதுகாப்புக்கு இப்படி செய்யுங்கள்

2025-04-09 15:21:33
news-image

சத்துக்கள் நிறைந்த முலாம்பழ விதை

2025-04-09 13:36:35