(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மேலதிக தனியார் வகுப்புக்களை கண்காணிப்பதற்கு கல்வி அமைச்சில் எவ்விதமான கொள்கைகளும் கிடையாது. ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் தனியார் வகுப்புகள் நடத்துவது பிரிவெனா உட்பட அறநெறி கல்வி முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக மத தலைவர்கள் முன்வைத்துள்ள விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தி உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்று பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது தேசிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மசிறி திஸாநாயக்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கேள்விகளை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் தர்மசிறி திஸாநாயக்க, தனியார் மேலதிக வகுப்புகளில் கல்வி நடவடிக்கைகளுக்கு செல்லும் மாணவர்கள் குறித்த ஆசிரியர்களினால் பாலியல் வன்கொடுமைகளுக்கும், வன்கொடுமைகளுக்கும் உள்ளாவதாக ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிடுகின்றன. ஒருசில தனியார் மேலதிக வகுப்புகளின் ஆசிரியர்களின் கல்வி தகைமை குறித்தும் பிரச்சினைகள் காணப்படுகிறது. ஆகவே இந்த விடயங்களை கண்காணிப்பதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய, நாட்டில் சட்டம் என்பதொன்று உள்ளது. சிறுவர் துஸ்பிரயோகத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து மேலதிக கேள்வியை முன்வைத்த தர்மசிறி திஸாநாயக்க, ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் பிரிவெனா உட்பட ஏனைய மதங்களின் அறநெறி கல்வி நடவடிக்கைகள் நடைபெறும். சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களை போன்று கனிஸ்ட பிரிவு வகுப்பு மாணவர்களும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர மேலதிக தனியார் வகுப்புகளுக்கு செல்கிறார்கள். இதனால் மதம் சார்ந்த கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. இதனை கண்காணிப்பதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் உள்ளதா, என கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் இந்த விடயம் தொடர்பில் சர்வமத தலைவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். வெகுவிரைவில் உரிய தீர்மானத்தை அறிவிப்போம் என்றார்.
இதன்போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன, மேலதிக தனியார் வகுப்புக்களின் தகைமை கண்காணிக்கப்படுமா என்று கேள்வியெழுப்பப்பட்டது. இருப்பினும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என்றார்.
இதற்கு பதிலளித்த பிரதமர், மேலதிக தனியார் வகுப்புக்களை கண்காணிப்பதற்கு கல்வி அமைச்சில் எவ்விதமான கொள்கைகளும் கிடையாது என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM