(லியோ நிரோஷ தர்ஷன்)

உணர்வுகள், சாவல்கள் மற்றும் எதிர்ப்பார்ப்புகள் என்பன இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பொதுவானவையாகவே காணப்படுகின்றது. எனவே தான் இரு நாட்டு தலைவர்களும் ஒரே இலக்கை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்துள்ளனர் என  தெரிவித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சேந்து, கற்றுக்கொள்வதை நிறுத்தினாலும் வாழ்க்கை கற்றுக்கொடுப்பதை நிறுத்துவதில்லை எனவும் குறிப்பிட்டார். 

திருவள்ளுவரின் உருவச்சிலை திறப்பு விழா இன்று பம்பலப்பிட்டிய இராமநாதன் கல்லூரியில் இடம்பெற்றது. இதன் பின்னர் சரஸ்வதி மண்டபவத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாறும் போதே இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.