காயங்களுக்கு கட்டுப்போடும் போது இவற்றை கவனத்தில்கொள்ளவும்

08 Apr, 2025 | 02:45 PM
image

நமக்கே தெரியாமல் சில நேரம் நம் உடலில் காயங்கள் ஏற்படுவதுண்டு. அதற்கு உடனே மருத்துவரிடம் சென்று காயத்துக்கு கட்டுப் போடுகிறோம். 

உண்மையில் காயத்தை கட்டி வைப்பது சரியா? அல்லது திறந்துவைப்பது சரியா? 

நமது உடல், மேல் தோல், நடுத்தோல், அடித்தோல் என்று மூன்று வகையான அடுக்களால் மூடப்பட்டுள்ளது. 

அதில் மேல் தோலில் மட்டும் ஏற்பட்ட காயம், அதாவது, தோல் கிழிந்திருந்தால், உதாரணத்துக்கு, சுடு தண்ணீல் உடம்பில் கொட்டி அதனால் காயம் ஏற்பட்டிருந்தால் அதை திறந்து வைப்பதுதான் சிறந்தது. 

அதுவே காயம் ஆழமானது என்றால் அதனை மூடிக் கட்ட வேண்டும். 

சில புண்களிலிருந்து இரத்தம், நீர், சீழ் போன்றவை வடியும். இவற்றை மூடி வைப்பது சிறந்தது. 

அதுவே சிறிய காயங்கள், கீறல்கள், சிராய்ப்புகள் போன்றவற்றுக்கு அன்றாடம் மருந்து தடவி மூடாமல் அப்படியே விட்டால் சீக்கிரம் சரியாகிவிடும்.  ஆனால், அதில் எதுவிதமான தூசுகளும் சென்று படியாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

அதுவே செல்லப்பிராணிகளால் ஏற்பட்ட மேலோட்டமான காயங்கள் போன்றவற்றுக்கு திறந்து வைத்து சிகிச்சையளித்தால் தான் நல்லது. 

தீப்புண் ஏற்பட்டால் சுத்தமான துணியால் மூடி வைக்க வேண்டும். 

இவ்வாறு ஒவ்வொரு வகையான காயங்களுக்கும் ஒவ்வொரு விதத்தில் சிகிச்சையளிக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிசேரியனுக்கு பின்னராக முதுகு வலி தீர்வு...

2025-04-17 17:34:21
news-image

புற்றுநோய் ஆபத்தை உருவாக்கும் ஞானப்பல்? 

2025-04-16 19:44:45
news-image

வெறும் 10 நாட்கள் போதும்… வித்தியாசத்தை...

2025-04-16 16:00:35
news-image

பயத்தில் நமது உடல் உறுப்புகள்..!

2025-04-16 15:34:29
news-image

சுவைக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் சிறந்தது கோணப்...

2025-04-16 12:55:52
news-image

லாரிங்கோபார்னீஜியல் ரிஃப்ளெக்ஸ் எனும் தொண்டை பாதிப்பிற்குரிய...

2025-04-16 03:48:16
news-image

கறுப்பு நிற உணவுகளில் உள்ளடங்கியிருக்கும் சத்துக்கள்

2025-04-13 12:52:03
news-image

கிரியாட்டீன் பவுடரை பாவித்தால் பக்கவிளைவு ஏற்படுமா?

2025-04-12 17:37:22
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் அதியுயர் வெப்பநிலை...

2025-04-11 16:30:48
news-image

பாடாய் படுத்தும் மன அழுத்தத்திலிருந்து விடுபட...

2025-04-10 14:24:20
news-image

பற்களின் பாதுகாப்புக்கு இப்படி செய்யுங்கள்

2025-04-09 15:21:33
news-image

சத்துக்கள் நிறைந்த முலாம்பழ விதை

2025-04-09 13:36:35