நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நேற்று திங்கட்கிழமை (07) உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா - பறையனாலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் , உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மரக்காரம்பளை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, நாவுல பொலிஸ் பிரிவின் லக்கலவிலிருந்து மாத்தளை நோக்கிச் சென்ற ஒரு காரை சோதனையிட்டபோது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் உள்நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தமையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தளை, ஹத்தொட்ட அமுன பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM