பொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது அனுமதிப்பத்திரமின்றி விற்பனை செய்யப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுபான வகைகளை மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசபதரன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மதுவரி அதிகாரிகள் இணைந்து இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது, மூவர் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு வெளிநாட்டு பிராண்டி, பியர், வொட்கா, ரம், வைன், சாராயம் உட்பட பெருமளவிலான மதுபான போத்தல்கள் டின்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மதுவரி அத்தியட்சகர் சுசாதரன் தலைமையிலான முதவரி அதிகாரிகளினால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.