பட்டுப் புடவையில் கறை படிந்தால் கவலை வேண்டாம்

08 Apr, 2025 | 12:15 PM
image

எத்தனையோ விதவிதமான புடவைகள் வந்தாலும் பட்டுப் புடவைக்கு இருக்கும் மவுசே தனி தான்.  ஆனால், அந்தப் பட்டுப் புடவைகளில் ஏதேனும் கறை படிந்துவிட்டால், அவ்வளவுதான் பெண்கள் கலங்கிவிடுவார்கள். 

உண்மையில் பட்டுப் புடவைகளில் படிந்துள்ள கறைகளை எளிதாக நீக்கிவிடலாம். 

சமையல் செய்யும்போது அல்லது பூஜை அறையில் இருக்கும்போது உங்கள் பட்டுப் புடவையில் எண்ணெய்க் கறை பட்டுவிட்டால் உடனே ஈரமற்ற சுத்தமான கொட்டன் துணியைக் கொண்டு அந்த இடத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். 

ஆனால், அந்த இடத்தை அழுத்தி தேய்க்காமல் கவனமாக இதனைச் செய்ய வேண்டும். பின் அந்த இடத்தில சற்று பவுடர் தூவி சுத்தம் செய்து, கறைபட்ட  இடத்தை ஓடும் நீரில் அலச வேண்டும். 

இவ்வாறு செய்தால் எண்ணெய்க் கறை நீங்கிவிடும்.  இதற்கு சுடு தண்ணீர் உபயோகிக்கக் கூடாது. 

அதேபோல் லிக்விட் சவர்க்காரத்தை குளிர்ச்சியான நீரில் கரைத்து அதில் சுத்தமான கொட்டன் துணியை நனைத்துக்கொள்ள வுண்டும்.  பின் கறை படிந்துள்ள இடத்தின் மேல் வைத்து மெதுவாக தேய்க்க வேண்டும். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right