தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; துப்பாக்கிதாரி உட்பட இருவர் கைது!

08 Apr, 2025 | 09:08 AM
image

தெவிநுவர பகுதியில் விஷ்ணு கோயிலுக்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில்  இரண்டு இளைஞர்கள் சுட்டுக்  கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை  (07) கந்தர  பொலிஸ்  நிலையத்தில் இரண்டு சட்டத்தரணிகளுடன்  ஆஜரான பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 மற்றும் 35 வயதுடைய கந்தர மற்றும் தெவிநுவர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம்  21 ஆம் திகதி , தெவிநுவர  விஷ்ணு கோயிலுக்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில்  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் வேனில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

2026-08-15 15:19:13
news-image

“நீதியின் ஓலம்” போராட்டத்துக்கு அனுமதியளித்த வலி....

2026-08-15 15:30:06
news-image

அங்குலான கடற்பகுதியில் டோரா படகு விபத்து...

2026-08-15 14:22:51
news-image

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்தியாவின்...

2026-08-15 14:30:14
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற மடு...

2026-08-15 13:41:43
news-image

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை...

2026-08-15 13:31:50
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள்...

2026-08-15 13:16:34
news-image

செம்மணி அகழ்வுகள் தமிழர் இனப்படுகொலையின் தீவிரத்தை...

2026-08-15 12:40:40
news-image

அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானம் அதிகரிப்பு!

2026-08-15 12:21:55
news-image

சிறைச்சாலை அதிகாரிகளைக் கொலை செய்யச் சதி...

2026-08-15 12:04:11
news-image

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனே தலையிட வேண்டும்...

2026-08-15 11:15:42
news-image

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை...

2026-08-15 11:53:49