பிள்ளையார் வழிபாட்டில் என்ன பொருளுக்கு, என்ன பலன்?

07 Apr, 2025 | 07:27 PM
image

வழிபாடுகளில் மிகவும் எளிமையான வழிபாடு என்றால், அது பிள்ளையாருக்கான வழிபாடுதான். மஞ்சள், குங்குமம்,  மண், சாணம் என்று எதை வேண்டுமானாலும் பிடித்துவைத்து பிள்ளையாராக வழிபடலாம். 

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், சகல சௌபாக்கியமும் கிடைக்கும், காரிய சித்தியாகும்.

குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க, செவ்வாய் தோஷம் அகலும், குழந்தைகள் படிப்பில் வல்லவராக சிறந்து விளங்குவர்.

புற்றுமண்ணில் பிள்ளையார் பிடித்துவைத்து வணங்கினால், நோய்கள் தீரும், விவசாயம் செழிக்கும்.

கற்கண்டில் பிள்ளையார் பிடித்து வணங்கினால், கணவன், மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். தனவரவு கிடைக்கும். குடும்பத்தில் நல்ல வளம் உண்டாகும்.

உப்பினால் பிள்ளையார் பிடித்துவைத்து வணங்கினால், எதிரிகள் தொல்லை நீங்கும். 

வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கிவந்தால் பில்லி,  சூன்யம்,  ஏவல் நீங்கும். செல்வச்செழிப்பு உயரும்.

விபூதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும். 

சந்தனத்தால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், புத்திர பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி, வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறும்.

வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால், வம்சவிருத்தி உண்டாகும்.

வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும். 

பசுஞ்சாண விநாயகர் நோய்களை நீக்குவார். கல் விநாயகர் வெற்றியைத் தருவார்,  மண் விநாயகர் உயர்பதவிகளைக் கொடுப்பார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நினைக்கும் காரியங்களில் வெற்றி பெற சங்கு...

2025-04-26 14:04:15
news-image

பில்லி சூனிய பாதிப்பிலிருந்து விடுபட உதவும்...

2025-04-24 14:39:26
news-image

வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் ஏழு...

2025-04-24 14:27:07
news-image

தன வசியம் நிகழ்த்தும் யோகினி வழிபாடு..!?

2025-04-23 16:11:22
news-image

வராத பணத்தை வசூலிப்பதற்கான பிரத்யேக வழிபாடு..!?

2025-04-22 16:24:25
news-image

தங்க நகைகளை சேமிப்பதற்கான சூட்சும வழிபாடு..!?

2025-04-21 15:35:22
news-image

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி பிரத்யேக...

2025-04-19 17:24:56
news-image

நினைத்ததை நிறைவேற்றுவதற்கு நாளாந்த தீப வழிபாடு

2025-04-18 18:32:08
news-image

‘மரணத்துக்கு ஒப்பான முடிகாணிக்கை…?’

2025-04-18 15:27:33
news-image

எந்த பூவை பாவிக்கக்கூடாது?

2025-04-18 12:19:55
news-image

உங்கள் குல தெய்வம் யாரென தெரியாதா...

2025-04-17 14:17:35
news-image

தன வரவை சாத்தியப்படுத்தும் பூக்கள்..!!

2025-04-17 03:54:56