இன்றைய திகதியில் எம்மில் பலரும் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆகியவற்றில் உயர்கல்வி கற்று, 'கலாநிதி' பட்டமும் பெற்று, ஏதேனும் புதியதொரு விடயத்தை கண்டறிந்து அதன் மூலமாக வாழ்வாதாரத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என விரும்புவார்கள்.
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஓரளவு வெற்றியும் ,ஓரளவு திருப்தியும், ஓரளவு வருவாய் ஆதாரமும் கிடைக்கும். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறுவதில்லை. இதற்கு தாமதத்தை விட தடைகளே அதிகம் என்பதாலும் அந்த தடைகளை தகர்ப்பது எப்படி? என்ற சூட்சமத்தை உணர்ந்து கொள்ளாததாலும் தான் ஒரு எல்லைக்கு மேல் ஆர்வத்துடன் போராடாமல், போதும் என்ற மனப்பான்மைக்கு வந்து விடுகிறார்கள்.
ஆனால் இவர்களைப் போன்றவர்கள் சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து சிந்திக்க வேண்டும். புதியனவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் இருக்கும்.
இவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை தகர்த்து வெற்றி பெறுவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சுத்தமான மந்திர வழிபாட்டினை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இவர்கள் திங்கள்கிழமை தோறும் வீட்டில் இருக்கும் சிவனின் உருவப்படத்திற்கு அல்லது சிவலிங்கத்தினை வில்வ இலைகளால் அலங்கரிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஐந்து அகல் விளக்குகளில் நல்லெண்ணையை ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
அதன் பிறகு '' ஓம் சிவ சிவ சிவாய நம ஓம்'' எனும் அதீத ஆற்றலை அள்ளி அள்ளித் தரும் மந்திரத்தை 108 முறை ஒருமுகமான மனதுடன் உச்சரித்து பிரார்த்திக்க வேண்டும். இந்த மந்திரத்தை 21 முறை உச்சரித்த பிறகு உங்களை சுற்றி ஒரு ஆரா எனும் ஆன்மீக ஆற்றல் பரவுவதை உணரலாம்.
108 முறை உச்சரித்த பிறகு அந்த கண்ணுக்குப் புலப்படாத சக்தியால் தூண்டப்பட்டு, உங்களுக்கான தடைகள் எதுவென்று புலப்படும். அதன் பிறகு அதனை எளிதாக தகர்த்து வெற்றியை தொடலாம். இந்த வழிபாட்டை ஆயுள் முழுவதும் தொடர்ச்சியாக மேற்கொண்டால் சுப பலன்கள் கிடைப்பதை அனுபவத்தில் உணரலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM