பிளாடர் எக்ஸ்ட்ரோபி எனும் பிறவி சிறுநீர்ப்பை குறைபாடு சில குழந்தைகளுக்கு பிறக்கும்போது ஏற்படுகிறது. வயிற்றில் கரு உருவாகி இருக்கும் தருணத்தில் குழந்தையின் சிறுநீர்ப்பை வயிற்றுப் பகுதிக்கு வெளியே உருவாகிறது. இந்த சிறுநீர்ப்பை நாளடைவில் தசைகளாலும், திசுக்களாலும் மூடப்படுகிறது. ஆனால் சில பிள்ளைகளுக்கு இது நிகழாது. இதனால் அவர்களுடைய சிறுநீர்ப்பை வெளியே வளர தொடங்கும். அத்துடன் அந்தப் பிள்ளைகளுக்கு சிறுநீர் கசிவு என்பதும் ஏற்படும். இது அசௌரியத்தை ஏற்படுத்தும்.
இதுபோன்ற அரிய பாதிப்பை கருவுற்றிருக்கும் காலத்தில் மேற்கொள்ளப்படும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலம் அவதானிக்கலாம். சில குழந்தைகளுக்கு பிறக்கும் வரை இத்தகைய பாதிப்பை துல்லியமாக அவதானிக்க இயலாது. சிறுநீர்ப்பை குறைப்பாட்டுடன் பிறக்கும். அதன் பிறகு சிறுநீர்ப்பையை மூடவும், சீரமைக்கவும் சத்ய ரசிகிச்சை அவசியமாகிறது.
இத்தகைய குறைபாட்டில் பல்வேறு நிலைபாடுகள் உண்டு. சிறுநீர்ப்பை, சிறுநீர் பாதையின் உறுப்புகளையும், செரிமான மற்றும் இனப்பெருக்க அமைப்புகளையும் உள்ளடக்கியது. மேலும் வயிற்றுப் புற சுவர், சிறுநீர்ப்பை, பிறப்புறுப்பு, இடுப்பெலும்புகள் ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறுநீர் தவறான வழியில் வெளியேற வைக்கும். இதனை மருத்துவ மொழியில் வெசிக்கோரெட்டால் ரிஃப்ளெக்ஸ் என குறிப்பிடப்படுகிறது. சில பிள்ளைகளுக்கு இதன் பாதிப்பு தீவிரமடைந்து ஆசனவாய் பகுதி திறக்கப்படாமல் போகக்கூடும். இதனால் இத்தகைய பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு சத்திர சிகிச்சை அவசியமாகிறது.
மரபணு குறைபாடு காரணமாகவே இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். இதற்கு சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.
வைத்தியர் ஸ்ரீபதி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM