இலங்கையின் ஆடைத்தொழிற்துறையானது, இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள் மற்றும் பொருத்திகளில் பெருமளவு தங்கியுள்ளது. 

இத்துறையில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் 70 சதவீதத்துக்கு அதிகமானவை மற்றும் பொருத்திகளில் 70-90 சதவீதத்துக்கு அதிகமானவை இறக்குமதி செய்யப்பட்டவை. 

மூலப்பொருட்கள் மற்றும் பொருத்திகள் போன்றன உற்பத்திச் செலவில் 70 சதவீதத்துக்கும் அதிகமான தொகையை கொண்டுள்ளதால், இந்தத்துறையின் வளர்ச்சிக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

தையல் பொருட்கள் துறையின் வியாபாரசார் துணி முகாமைத்துவ தீர்வுகளை வழங்கும் ThreadSol, தனது புத்தாக்கமான தீர்வுகளான intelloBuy மற்றும் intelloCut ஆகியவற்றின் மூலமாக இலங்கையின் ஆடைஉற்பத்தியாளர்களின் துணிக்கான செலவீனத்தில் 10 சதவீதத்தை வெற்றிகரமாக குறைத்துள்ளது.

ThreadSol இன் IntelloCut எனப்படுவது, தையல் பொருட்கள் துறையில் மூலப்பொருட்கள் திட்டமிடல் மற்றும் செம்மையாக்கல் தீர்வாக அமைந்துள்ளது. algorith களின் உதவியுடன் IntelloCut இனால் மிகவும் செம்மையாக்கப்பட்ட ஆடை பாவனை திட்டம் வழங்கப்படுவதுடன், அதனூடாக செம்மையாக்கப்பட்ட வெட்டல் வழங்கப்படுவதுடன் விரயம் ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது. ThreadSol இன் IntelloBuy என்பது, ஆடைத்தொழிற்துறைக்கு மூலப்பொருட்கள் மதிப்பீட்டு தீர்வாக அமைந்துள்ளது. ThreadSol இனால் வழங்கப்படும் இரண்டாது தயாரிப்பாக இது அமைந்துள்ளதுடன், IntelloBuy இனால் துல்லியமான பாவனைக்கான கொள்வனவு வழங்கப்படும். இதனூடாக மூலப்பொருட்கள் கொள்வனவின் போது பல மில்லியன் அமெரிக்க டொலர்களை மீதப்படுத்திக் கொள்ள முடியும். இலங்கையின் பிரதான ஆடை உற்பத்தியாளர்களான MAS ஹோல்டிங்ஸ், Orit அப்பரல்ஸ், Orit மலிபன் டெக்ஸ்டைல்ஸ், ஒமெகாலைன், கிரிஸ்டல் மார்டின், பிரான்டிக்ஸ், ஹைட்ராமணி போன்ற மாபெரும் உற்பத்தியாளர்களுடன் ThreadSol கைகோர்த்துள்ளது. 

இந்நிறுவனங்களின் விரயங்களை ஒரு சதவீதத்துக்கும் குறைந்த மட்டத்தில் பேணுவதற்கு உதவியிருந்தது.

Hirdaramani குழுமத்தின் பணிப்பாளரான அரூன் ஹைட்ராமணி கருத்துத் தெரிவிக்கையில்,

“ ThreadSol இன்  IntelloCut இனால் எமது ஆடைகள் வெட்டல் திறன் அதிகரித்துள்ளது. பல்வேறு ஆடைகள் அணிகளால் வினைத்திறன் வாய்ந்த வகையில் இந்த தீர்வு பயன்படுத்தப்படுகிறது. இந்த தீர்வை நாம் பரிந்துரைக்கிறோம்” என்றார்.

உலகில் தற்போது காணப்படும் தொழில்நுட்பத்தை ஆடைத்தொழிற்துறைக்கு அறிமுகம் செய்வதில் ThreadSol தன்னை அர்ப்பணித்துள்ளது. தொழிற்சாலைகளின் வினைத்திறன் தொடர்பான விவரங்களை உற்பத்தியாளர்களின் கையடக்க தொலைபேசிகளில் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஓமெகாலைன் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஃபீலிக்ஸ் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில்,

“intelloCut இலிருந்து எமக்கு கிடைத்துள்ள பிரதான அனுகூலமாக, ஆரம்ப கட்டத்திலிருந்து செயன்முறைகளை கட்டுப்படுத்த முடிந்துள்ளதை குறிப்பிடலாம். இது தொழிற்சாலையில் பொதுவான தொடர் செயற்பாடு இடம்பெறுவதை போன்றதாக அமைந்துள்ளதுடன், வினைத்திறன் வாய்ந்த தகவல் மீளளித்தல் கட்டமைப்பை கொண்டுள்ளது. இது தன்னியக்கமான முறையில் நடைபெறுவதுடன், பிரிவில் சிறந்ததாக அமைந்துள்ளது” என்றார்.

ThreadSol இன் இலங்கைக்கான முகாமையாளர் பிரதீக் நைகம் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கையின் ஆடை உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்களின் செலவீனத்தை குறைப்பதன் மூலமாக தமது இலாபத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர். சந்தையில் போட்டிகரமாகத்திகழ, தமது செயற்பாடுகளை தன்னியக்கப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக சரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இந்த வளர்ச்சியான தருணத்தில் நாம் அவர்களுடன் கைகோர்க்க எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.  ThreadSol இனால் பரிபூரண வியாபார மூலப்பொருட்கள் நிர்வாக தீர்வுகள் வழங்கப்படுகின்றன. இது இலங்கையின் ஆடை உற்பத்தியாளர்களுக்கு பெருமளவு மூலப்பொருட்கள் செலவீன குறைவை ஏற்படுத்தி அவர்களின் இலாபத்தை 50 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும். இந்தத்துறை பொருளாதார முக்கியத்துவத்தில் பெருமளவு தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Threadsol பற்றி:

2012ம் ஆண்டில் ThreadSol அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், உற்பத்தி துறைகளில் பாரம்பரிய வகையில் பயன்படுத்தப்பட்ட முறைகளுக்கு சவாலளிக்கும் வகையில் புத்தாக்கமான தீர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. குறுகிய கால செயற்பாட்டில், ThreadSol தனது அலுவலகங்களை டெல்லி, பெங்களுர், ஜகார்தா, கொழும்பு, இஸ்தான்புல், ஹோசி மின் சிட்டி மற்றும் டாக்கா ஆகிய நகரங்களில் கொண்டுள்ளது. உலகளாவிய ரீதியில் 100க்கும் அதிகமான வெற்றிகரமான கதைகளை கொண்டுள்ள, ThreadSol தொடர்ச்சியாக மூலப்பொருட்கள் சேமிப்பு மற்றும் நிலைபேறான இலாபத்தை பெற்றுக்கொடுக்கும் நாமமாக அமைந்துள்ளது. மேலதிக விவரங்களுக்கு www.threadsol.com எனும் இணையத்தளத்தை பார்க்கவும்.