கொழும்பு பங்குச் சந்தையில் S&P SL20 குறியீடு 5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்ததால் வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை (07) காலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
வர்த்தக நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
அதன்படி, பங்குச் சந்தை நடவடிக்கைகள் காலை 9.51 மணி முதல் காலை 10.07 மணி வரை பதினாறு நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது. மேலும் காலை 10.07 மணி முதல் காலை 10.21 மணி வரை பதினான்கு நிமிடங்கள் ஏல விற்பனையை நடத்தியது.
அதன்பிறகு, வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் காலை 10.21 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகியது.
S&P SL20 குறியீடு 240.45 புள்ளிகள் அல்லது 5.3 சதவீதம் சரிந்து 4,292.90 ஆகவும், அனைத்து பங்கு விலைச் சுட்டிகள் (ASPI) ஆரம்ப வர்த்தகத்தில் 4.16 சதவீதம் அல்லது 639.01 புள்ளிகள் சரிந்து 14,734.34 ஆகவும் சரிந்தது என கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்தள்ளது.
பங்குகள் முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்தால் கொழும்பு பங்குச் சந்தையில் வர்த்தகம் இடைநிறுத்தப்படும்.
அதேவேளை, ஆசிய சந்தைகள் சரிந்துள்ளன, இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போரால் தூண்டப்பட்ட உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சியை ஆழப்படுத்தியுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM