ஏப்ரல் 7 இன்று உலக சுகாதார தினம்

Published By: Vishnu

07 Apr, 2025 | 02:34 AM
image

(செ.சுபதர்ஷனி)

உலக வாழ் மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் திகதி சர்வதேச சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று திங்கட்கிழமை உலக சுகாதார தினமாகும். பொதுமக்களின் சுகாதார தேவை அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் சுகாதார தேவைகள் முறையாக பூர்த்தி செய்யப்படுவதுடன் அனைவருக்கும் சமமாக்கிடைக்க வேண்டும் என்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சர்வதேச சுகாதார தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து இந்நாளில் மக்களுக்கு பரவலான விழிப்புணர்வுகளும் தெளிவூட்டல்களும் வழங்கப்படுவதுடன், ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் தொடர்பிலும் அறிவூட்டல்கள் வழங்கப்படுகின்றன. பல தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் ஏற்படுவதில் எமது சுகாதாரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளாவிய சுகாதார பிரச்சினைகளை இதன்போது விசேடமாக கலந்துறையாடப்படுகின்றது. அந்தவகையில்  மன நல ஆரோக்கியம், தாய் சேய் நலன், சிறுவர்களின் ஆரோக்கியம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டது,

அந்தவகையில் இவ்வருடமும் தாய் சேய் நலன் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட உள்ளதுடன் வருடமுழுவதும் இதுதொடர்பான விழிப்புணர்வுகள் வழங்கப்பட உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ”ஆரோக்கியமான தொடங்கங்கள் நம்பிக்கைக்குறிய எதிர்காலங்கள்” என்ற விசேட தொனிப்பொருளுக்கமைய உலக சுகாதார தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டதுடன், இத்தொனிப்பொருளுக்கமைய பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட உள்ளது.

பிரசவத்தின் போது உயிரிழக்கும் தாய்மார் மற்றும்  சிசுக்களின் மரணத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தவும், பெண்களின் நீண்டகால ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை முன்னிலைப் படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் அரசாங்கத்தையும் சுகாதார நிறுவனங்களையும் வலியுறுத்தியுள்ளது. கர்ப்பகால ஆரோக்கியத்தையும் பிரசவத்திற்கு பின்னரான ஆரோக்கியம் தொடர்பில் அனைவரும் மிகுந்த கரிசனையுடன் செயற்பட வேண்டும். துரதிஷ்டவசமாக வருடாந்தம் உலகளாவிய ரீதியில் கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்தின் போது 300 இலட்சம் பெண்கள் உயிரிழக்கின்றனர்.

அதேநேரத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்த முதல் மாதத்திலேயே உயிரிழக்கின்றனர், மேலும் சுமார் 2 மில்லியன் குழந்தைகள் இறந்து பிறக்கின்றன. அந்தவகையில் ஒவ்வொரு 7 வினாடிக்கு ஒரு தடவை கர்ப்பம், பிரசவம் காரணமாக மரணம் சம்பவிக்கிறது. ஆகையால் இத்தகைய மரணங்களின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு மகப்பேறு சிக்கல்கள் மாத்திரமல்லாது, மன ஆரோக்கியம், தொற்றா நோய்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகியவை தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிசேரியனுக்கு பின்னராக முதுகு வலி தீர்வு...

2025-04-17 17:34:21
news-image

புற்றுநோய் ஆபத்தை உருவாக்கும் ஞானப்பல்? 

2025-04-16 19:44:45
news-image

வெறும் 10 நாட்கள் போதும்… வித்தியாசத்தை...

2025-04-16 16:00:35
news-image

பயத்தில் நமது உடல் உறுப்புகள்..!

2025-04-16 15:34:29
news-image

சுவைக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் சிறந்தது கோணப்...

2025-04-16 12:55:52
news-image

லாரிங்கோபார்னீஜியல் ரிஃப்ளெக்ஸ் எனும் தொண்டை பாதிப்பிற்குரிய...

2025-04-16 03:48:16
news-image

கறுப்பு நிற உணவுகளில் உள்ளடங்கியிருக்கும் சத்துக்கள்

2025-04-13 12:52:03
news-image

கிரியாட்டீன் பவுடரை பாவித்தால் பக்கவிளைவு ஏற்படுமா?

2025-04-12 17:37:22
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் அதியுயர் வெப்பநிலை...

2025-04-11 16:30:48
news-image

பாடாய் படுத்தும் மன அழுத்தத்திலிருந்து விடுபட...

2025-04-10 14:24:20
news-image

பற்களின் பாதுகாப்புக்கு இப்படி செய்யுங்கள்

2025-04-09 15:21:33
news-image

சத்துக்கள் நிறைந்த முலாம்பழ விதை

2025-04-09 13:36:35