SLC தேசிய சுப்பர் லீக் நான்கு நாள் கிரிக்கெட்: சதங்கள் தாராளமாக குவிக்கப்பட்ட மூன்றாவது வாரம்

Published By: Vishnu

07 Apr, 2025 | 02:34 AM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவரும் சுப்பர் லீக் நான்கு நாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் மூன்றாவது வாரமான இந்த வாரம் சதங்களும் அரைச் சதங்களும் தாராளமாகக் குவிக்கப்பட்டடன.

மூன்றாவது வாரம் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஓர் இரட்டைச் சதம், 7 சதங்கள், 10 அரைச் சதங்கள் குவிக்கப்பட்டன.

கண்டி - தம்புள்ளை போட்டி (ஏப்ரல் 03 - 06)

கண்டி - தம்புள்ளை அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதல் இன்னிங்ஸில் கண்டி அணித் தலைவர் பெத்தும் நிஸ்ஸன்க இரட்டைச் சதம் குவித்ததுடன் அவரது அணியைச் சேர்ந்த சொஹான் டி லிவேரா (1 ஆவது   இன்.), பவன்த வீரசிங்க (2ஆவது இன்.) ஆகியோரும் தம்புள்ளை சார்பாக அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா (1ஆவது இன்.), நிஷான் மதுஷ்க மற்றும் தசன் ஷானக்க (2ஆவது இன்.) ஆகியோரும் சதங்களைக் குவித்தனர்.

துடுப்பாட்ட வீரர்கள் அசத்திய இந்த வார போட்டிகளில் பந்துவீச்சில் அக்கில தனஞ்சய உயர்ந்து காணப்பட்டார். தம்புள்ளை சார்பாக விளையாடும் அக்கில தனஞ்சய 10 விக்கெட் குவியலைப் பதவுசெய்தார். அவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் 10 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்தது விசேட அம்சமாகும். இதுவரை அவர் 3 போட்டிகளில் 32 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் கணிசமான மொத்த ஓட்டங்கள் பெறப்பட்ட இப் போட்டியில் தம்புள்ளை 4 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

எண்ணிக்கை சுருக்கம்

கண்டி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 453 (பெத்தும் நிஸ்ஸன்க 203, சொஹான் டி லிவேரா 141, அக்கில தனஞ்சய 140 - 5 விக்., சமிந்து விக்ரமசிங்க 59 - 3 விக்., டினுர களுபஹன 64 - 2 விக்., நிஸ்ஸன்கவும் டி லிவேராவும் 5ஆவது விக்கெட்டில் 245 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்)

தம்புள்ளை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 340 (தனஞ்சய டி சில்வா 108, தசுன் ஷானக்க 63, அஷேன் டெனியல் 109 - 4 விக், ஷிரான் பெர்னாண்டோ 42 - 3 விக்.)

கண்டி 2ஆவது இன்: 278 - 9 விக். டிக்ளயார்ட் (பவன்த வீரசிங்க 101, ரவிந்து பெர்னாண்டோ 74, அக்கில தனஞ்சய 87 - 5 விக்.)

தம்புள்ளை (வெற்றி இலக்கு 392 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 392 - 6 விக். (நிஷான் மதுஷ்க 126, தசுன் ஷானக்க 100, ரொன் சந்த்ரகுப்தா 64, சஹான் நாணயக்கார 115 - 3 விக், ஷிரான் பெர்னாண்டோ 54 - 2 விக்.)

யாழ்ப்பாணம் - காலி போட்டி

வெற்றிதோல்வியின்றி முடிவு (ஏப். 03 - 06)

யாழ்ப்பாணத்திற்கம் காலிக்கும் இடையில் ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இந்தப் போட்டியில் காலி அணி சார்பாக ரமேஷ் மெண்டிஸும் யாழ்ப்பாணம் அணி சார்பாக ஏஞ்சலோ மெத்யூஸும் சதங்கள் குவித்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

யாழ்ப்பாணம் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 305 (தானுக்க தாபரே 82, ஷெவன் டெனியல் 56, ஏஞ்சலோ மெத்யூஸ் 52, டிலும் சுதீர 60 - 5 விக்.)

காலி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 371 (ரமேஷ் மெண்டிஸ் 124, துனித் வெல்லாலகே 68, ஓஷத பெர்னாண்டோ 62, சித்தும் திசாநாயக்க 57 - 3 விக்., அசன்க மனோஜ் 59 - 3 விக்.)

யாழ்ப்பாணம் 2ஆவது இன்: ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 354 - 5 விக். (ஏஞ்சலோ மெத்யூஸ் 103, ஷெவன் டெனியல் 96, நிரோஷன் திக்வெல்ல 60 ஆ.இ., நிசல திசார 34 - 2 விக்.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது மகளிர்...

2026-07-13 20:58:58
news-image

இந்தியாவுடனான  இளையோர் டெஸ்ட் கிரிக்கெட்: சேனுஜ...

2026-07-13 21:08:28
news-image

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா,...

2026-07-13 16:14:05
news-image

ஆடவர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில்...

2026-07-13 15:30:10
news-image

சுப்பர் லீக் கால்பந்தாட்டம் கோலாகலமாக தொடங்கியது...

2026-07-13 10:21:23
news-image

சுவிட்ஸர்லாந்தின் கடும் சவாலை மேலதிக நேரத்தில்...

2026-07-12 15:03:27
news-image

பெலிங்ஹாமின் இரட்டை கோல்களுடன் நோர்வேயை வென்று...

2026-07-12 14:17:29
news-image

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு...

2026-07-12 04:47:37
news-image

ஸ்பெய்ன் - பெல்ஜியம் அணிகள் மோதும்...

2026-07-10 21:27:35
news-image

எம்பாப்பே, டெம்பெல் போட்ட கோல்களின் உதவியுடன்...

2026-07-10 14:02:34
news-image

வவுனியாவில் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டி ஆரம்பம்

2026-07-10 06:08:28
news-image

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணியிடம் இலங்கை...

2026-07-09 23:58:00