முத்துத் தழிழரசி அன்னை முத்துமாரியம்மா பங்குனித் திங்களில் கம்பளை உத்தியோகத்தர்கள் உளம் உவகை கொள்ள உன் திருப்புகழ் அவனியெங்கனும் மணம் வீசுதம்மா...!
தாயெனும் தத்துவத்தை சத்தியமாய் நம்பும் உள்ளங்கள் உவகை காண அருள் செய் அன்னை பராசக்தியளே நித்தம் தவம் கிடந்து பக்தர் தம் அல்லல் அகற்றி உத்தர திருநாள்தனில் இத்தரணி நலங்காண கம்பளைத் திருநகர் வலம் வருவாய் அன்னை முத்துமாரியம்மா....!
அடியார் சிரமதில் மஹாவலி புனலுடன் ஆடிவரும் முக்கரகத்துடன் அருளாசி வழங்கும் மிளிர்தகு மேனியில் எழில் கொண்ட முத்துமாரியம்மா கோபுரத்து மணியோசை நகரெங்கும் திருவொலி முழங்க அந்தணர் வேத முழக்கம் புகழுரைக்க நின் திருவடி சிலம்போசை ஒலிக்குதம்மா...!
நின்பதம் பற்றி ஆற்றிய அரும்பணிகள் யாவும் நின் கருணையால் கட்டியம் கூறுதம்மா கணப்பொழுதினில் கடுந்துயர் நீக்கி பக்தைகள் ஏந்தும் அக்கினிதனில் துர்குணங்கள் அகற்றி இம்மண்ணகம் சீர் நிறைய அருட்காட்சி மேவும் அருந்தவச்செல்வி அன்னை முத்துமாரியம்மா....!
துங்கக் கரிமுகத்து தூமணியாய் கணபதியுடன், சக்தித் திருமகன் முத்துக்குமரனவன் பரிவாரமாய் அன்னையவள் திருச்சந்நிதி கருவறையாய் அருள்மேவ கம்பளை மாந்தர் துதிசெய் அன்னை முத்துமாரியம்மா....!
வித்தைமிகு வித்தக முத்து விநாயகன் கம்பளை இந்துக் கல்லூரி அகம் செய்ய, வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை என கதிர்வேலாயுதன் அரணாய் திருக்கோயில் கொண்டு இம்மண்ணில் வேலெடுக்க திரிசூலம் ஏந்திய திருக்காளியாய் பங்குனி உத்தர திருநாளில் திருக்காட்சி அளித்து நல்வரம் அருள்வாய் அன்னை முத்துமாரியம்மா நின் பாதார விந்தம் பற்றிப் போற்றுகின்றோம் நல்வரம் தாருமம்மா...!
ஆக்கம்:
அருள்மிகு கம்பளை
ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான செயலாளர் கணேசன் ஆச்சாரி சதீஷ்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM