காணாமல் போனோர் அலுவலகம் நிறுவுதலை அரசியல் ரீதியாக பார்க்கவேண்டாம் : அமைச்சர் சுவாமிநாதன் 

Published By: Priyatharshan

22 Jun, 2017 | 10:26 AM
image

காணாமல் போனோர் அலு­வ­லகம் நிறு­வு­வ­தனை அர­சியல் ரீதி­யாக பார்க்க வேண்டாம். மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் பாருங்கள் என மீள்­கு­டி­யேற்றம், சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்வு மற்றும் இந்து மத விவ­கார அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார்.

காண­ாமல்­போ­ன­வர்கள் விட­யத்­திற்கு தீர்­வ­ளிக்கும் வகை­யி­லான அனைத்து நட­வ­டிக்­கை­களையும் அர­சாங்கம் நிச்­சயம் முன்­னெ­டுக்கும் எனவும் அமைச்சர் சுவா­மி­நாதன் உறு­தி­படத் தெரி­வித்தார்.

பாரா­ளு­ம­ன்றத்தில் நேற்று புதன்­கி­ழமை நடைபெற்ற காண­ாமற்­போன ஆட்கள் பற்­றிய அலு­வ­லகம்(தாபித்­தலும், நிர்­வ­கித்­தலும், பணி­களை நிறை­வேற்­று­தலும்) திருத்­தச்­சட்­ட­மூ­லத்தின் இரண்­டா­வது மதிப்­பீட்டு விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

ஐக்­கிய நாடுகள் சபையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தின் பிர­காரம் காணாமல் போனோர் பற்­றிய அலு­வ­லகம் நிறு­வப்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதன் ஊடாக யுத்­தத்தின் போது காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்று கோரும் உற­வி­னர்­க­ளுக்கு பதி­ல­ளிப்­பதே நோக்­க­மாகும். தம்­மு­டைய உற­வு­களை இழந்து வாழும் மக்கள் காணாமல் போன­வர்­களைத் கண்­டு­பி­டித்து தரு­மாறு கோரு­வதற்கு உரிமை உள்­ளது. அந்த உரி­மையை நாம் நிரா­க­ரிக்க முடி­யாது.

இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்­கள மக்கள் ஆயி­ரக்­க­ணக்­கான வரு­டங்­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்­க­ளுக்­கி­டை­யி­லான பிள­வுகள் ஏற்­ப­டாது இந்த நாட்டில் ஐக்­கி­ய­மாக வாழ்­வ­தற்­கான சூழல் ஏற்­ப­டுத்த வேண்டும். நல்­லி­ணக்க சூழல் உரு­வா­கு­வ­தற்­கான நிலை­மைகள் தற்­போது ஏற்­பட்­டுள்­ளன. 

இந்த சந்­தர்ப்­பத்­தினை கைவி­ட­மு­டி­யாது. எமது அர­சாங்கம் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிறு­வி­யுள்­ளது. தக­வ­ல­றியும் சட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளது. அவ்­வா­றான நிலையில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு அமை­வாக தற்­போது காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வ­ல­கத்­தினை தாபிக்கும் சட்­ட­மூ­லத்­தினை தற்­போது திருத்­தங்­க­ளுடன் நிறை­வேற்­று­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது.

இதன்­மூலம் அந்த உற­வு­க­ளுக்கு நிச்­ச­ய­மான தீர்­வொன்று கிடைக்கும் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது.  ஆகவே காண­ாம­லாக்­கப்­பட்ட அலு­வ­ல­கத்­தினை தாபிப்­ப­தற்­கான சட்­ட­மூல  விட­யத்தை எவரும் அர­சி­ய­லாக்க கூடாது. இந்த விட­யத்தை மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் பார்க்க வேண்டும். யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியின் பின்னர் கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் எதுவும் இது­வரை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. 

அவ்­வா­றான நிலையில் இந்த அலு­வ­ல­கத்தின் ஊடாக மன ரீதி­யாக பாதிக்­கப்­பட்ட உறவுகளுக்கு தீர்வுகள் நிச்சயமாக கிடைக்கும் என நம்புகின்றோம். இந்த விடயத்தில் நாம் நியாயமாக நடந்து கொள்ளவேண்டும்.

தற்போது வடக்கில் காணாமல்போன வர்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண் டிருக்கின்றார்கள். அவர்களின் கோரிக் கைகள் இந்த பொறிமுறையூடாக நிறை வேறும். மேலும் அரசாங்கம் தமிழ் மக் களை ஒருபோதும் கைவிடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32