காணாமல் போனோர் அலு­வ­ல­கத்­தினை தாபிப்­பதில் தாமதங்கள் தொடர்­வ­தாக சுட்­டிக்­காட்­டிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் குறித்த அலு­வ­ல­கத்­திற்­கான ஆணை­யா­ளர்­களை நிய­மிப்­ப­தற்கு அர­சி­ய­ல­மைப்பு பேரவை தவ­றி­யி­ருக்­கின்­றது என்றும் குற்­றம்­சாட்­டினார்.

பாரா­ளு­ம­ன்றத்தில் நேற்று புதன்­கி­ழமை நடைபெற்ற காண­ாமற்­போன ஆட்கள் பற்­றிய அலு­வ­லகம்(தாபித்­தலும், நிர்­வ­கித்­தலும், பணி­களை நிறை­வேற்­று­தலும்) திருத்­தச்­சட்­ட­மூ­லத்தின் இரண்­டா­வது மதிப்­பீட்டு விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

காணாமல் போனோர் தொடர்­பான அலு­வ­லக சட்டம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விவா­திக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது. இது­வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இச்­சட்­ட­மூ­லத்தில் ஒரு சிறி­ய­தொரு பிரிவை நீக்­கு­வதே தற்­பொ­ழுது கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள திருத்­த­மாகும். 

நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்­கத்தால் முன்­னெ­டுத்­து­வைத்­துள்ள சிறி­ய­தொரு அடியை தொடர்ந்தும் முன்­ந­கர்த்த திருத்தம் ஒரு கார­ண­மாக சொல்­லப்­ப­டு­கி­றது.  மக்­களை காணாமல் செய்­வது குற்­ற­மாகும். அதனை சட்­ட­மாக்­கு­வ­தற்­காக சட்­ட­மூ­ல­மொன்றை அர­சாங்கம் கொண்­டு­வ­ர­வுள்­ளது. அச்­சட்டம் விரைவில் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். 

காணாமல் போன­வர்­க­ளுக்­கான அலு­வ­லக சட்­டத்தில் ஜே.வி.பி கொண்­டு­வரும் திருத்­தத்தை நிறை­வேற்­று­வ­தற்­காக இதனை நடை­மு­றைப்­ப­டுத்­தாமல் இருப்­பது நியா­ய­மற்­றது. 

பாரா­ளு­மன்­றத்தில் குறித்த சட்டம் நிறை­வேற்­றப்­பட்ட போதும் ஜே.வி.பியின் திருத்­தத்தை உள்­ள­டக்­கு­வ­தற்­காக அதனை நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்­லை­யென்ற அர­சாங்­கத்தின் கார­ணத்தை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. 

அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் தலைவர் என்ற ரீதியில் சபா­நா­யகர், ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­களை கூட நிய­மிக்­க­வில்லை. இதற்­கான பொறுப்பு அர­சி­ய­ல­மைப்பு சபைக்கு உள்­ளது. அது மாத்­தி­ர­மன்றி இந்த அலு­வ­லகம் யாரின் கீழ் வர­வேண்டும், இதற்­கான அமைச்சர் யார் என்­பது இன்­னமும் அடை­யாளம் காணப்­ப­ட­வில்லை. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மையில் சம்­பூரில் பேசும்­போதும் காணாமல் போன அலு­வ­ல­கத்­தி­ருத்தம் நிறை­வேற்­றப்­பட்­டதும் அமைச்சு அடை­யாளம் காணப்­பட்டு வர்த்­த­மா­னியில் அறி­விக்­கப்­படும் எனக் கூறி­யி­ருந்தார். இது விரைவில் மேற்­கொள்­ளப்­படும் என நம்­பு­கின்றோம். 

காணா­ம­லாக்­கப்­பட்­டோரை கண்­ட­றி­வ­தற்­கான அலு­வ­லகம், சிவில், குற்­ற­வியல் செயற்­பாட்டை தீர்­மா­னிக்­காது. இதன் செயற்­பாடு மிகவும் முக்­கி­ய­மா­னது. காணா­மல்­போ­ன­வரின் உற­வி­னர்கள் திருப்தி கொள்ளும் வகையில் முடி­வொன்றை வழங்­க­வேண்டும். அது நிலை­யான பொறி­மு­றை­யாகும்.  அது­மட்­டு­மன்றி சர்­வ­தே­சத்­தினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட நடை­மு­றை­யு­மாகும். 

இந்த அலு­வ­லகத்தை தாபிப்­பது குறித்த பாது­காப்பு தரப்பின் அச்சம் நியா­ய­மற்­றது. இதில் பாது­காப்பு தரப்­பினர் மாத்­தி­ர­மன்றி ஏனைய தரப்­புக்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட காணா­மல்­போன சம்­ப­வங்­களும் காணப்­ப­டு­கின்­றன. காணாமல் போகச் செய்­யப்­பட்ட சம்­ப­வங்­க­ளுக்கு பல்­வேறு தரப்­பி­னரும் இருக்­கின்­றனர்.

ஒருவர் காணாமல் போயி­ருந்தால் எங்கு சென்று அவர்­களைப் பார்க்க முடியும் என்று மக்கள் நம்­பி­யி­ருந்­தனர். ஈ.பி.டி.பி. உள்­ளிட்ட ஆயு­தக்­கு­ழுக்­களால் பல காணாமல் போதல்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. இவற்றை விடு­த­லைப்­பு­லி­களும் செய்­தி­ருந்­தனர். துரோ­கிகள் என அடை­யாளம் காணப்­ப­டலாம் என்ற கார­ணத்­தினால் யாரால் காணாமல் ஆக்­கப்­பட்­டார்கள் என்­பதை பகி­ரங்­கப்­ப­டுத்த சிலர் அச்­ச­ம­டைந்­தனர். 

காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக அலு­வ­லகச் சட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம் அச்­சப்­ப­டக்­கூ­டாது. அச்­சட்­டத்­தினை விரைவில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். காணா­மல்­போ­ன­வர்­க­ளுக்­கான சான்­றிதழ் பெறு­வது தொடர்பில் மக்கள் தெளிவில்­லாமல் இருக்­கின்­றனர்.

சான்­றிதழ் வாங்­கப்­பட்டால் விசா­ர­ணை கள் நடை­பெ­றாதா என்ற சந்­தேகம் மக்கள் மத்­தியில் உள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு சான்­றி­தழை வழங்குவதானது காணாமல் போயுள்ளார் என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதற்கான முதற்படியாகும். 

அத்துடன் நட்டஈடு வழங்குவது மற்றும் சட்டப் பிரச்சினைகளுக்கு உதவியாக இருக்கும். மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அதிகாரிகள் குறித்த விடயத்தில் தெளிவில்லாமல் இருக்கின்றனர். இதனால் மக்கள் பிழையாக வழிநடத்தப்படுகின்றனர். அதனை தெளிவு

படுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு உள்ளது. அதுகுறித்து நடவடிக்கைகளை உரிய முறையில் எடுத்து தாமதமின்றி இதனை அமுல்படுத்த வேண்டும் என கோருகின்றேன் என்றார்.